*இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘இந்திய நீதி பயணம்’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறார் ராகுல் காந்தி. 14 மாநிலங்களில், 6200 கி.மீ. தூரம் பயணித்து மும்பையில் மார்ச் 20-ம் தேதி பயணம் முடிவடையும் என்று காங்கிரஸ் தகவல். *சென்னை எண்ணூர் அருகே உள்ள கோரமண்டல் என்ற தனியார் உர நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வரContinue Reading

*தேசியக்  கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்துவதால் பாரதீய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை .. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேச்சு. *திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு அடியோடு  கெட்டு விட்டது, போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது … அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு  மீது சரமாரி புகார். *நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி படுத்தContinue Reading

செப்டம்பர்,11- அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள் வித விதமானb பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ‘கேடிலாக் ஒன்’ ‘ஃபர்ஸ்ட் கார்’, ‘பீஸ்ட்’ போன்ற பெயர்கள் பிரசித்தம். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்த வாகனத்தைத்தான் அதிபர்கள் பயன்படுத்துவார்கள். அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ’யானை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே’ என்பது மாதிரி, ஒரே பதிவு எண்ணைக்கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் அவர் பயணிக்கும்Continue Reading

ஆகஸ்டு,31- நம்முடைய செல்போனில் நாம் பேசுவது, வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், மெயில்கள் அனைத்தையும் இந்திய அரசு ஒட்டுக் கேட்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில ஏடு செய்தியாக வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வீகியர், காக்னிட். செப்டியான் ஆகிய நிறுவனங்கள் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை செய்து கொடுக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 140 கோடிContinue Reading

ஆகஸ்டு,20 . நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக  ரஷ்யா, லூனா-25Continue Reading

மரண ஓலை எழுதப்பட்டு, பின்னர் உயிர் பிழைத்து வரும் நாயகர்களாக உலகில் இரண்டு பேர்   உள்ளனர். ஒருவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இரும்புத்திரை நாட்டை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர். கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வரும். ‘அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். இறந்து போனார்’ என்று கூட செய்திகள் வந்தன.கொஞ்சநாள் கழித்து ஏதாவது ஒரு ராணுவ நிகழ்ச்சியில் முகம் காட்டி,Continue Reading

ஆகஸ்டு,08- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்  2021 ஆம் ஆண்டு வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் என்றால் நவீனத்துவத்தின் எதிரி- பெண்களின் எதிரி என்று அர்த்தம். அதற்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆட்சிக்கு வந்த நேரத்தில், தாங்கள் ’’சைவ கொக்காக’’ மாறி விட்டதாக தலிபான்கள் பசப்பினர். ‘’ கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது-. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும்’’Continue Reading

  ஆகஸ்ட், 04- ஜெர்மனியில் இருந்து இரண்டு வயது அரிஹா ஷாவை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த வேண்டுகோளை அடு்த்து இந்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அரிஹாவின் தாயார் தாரா ஷா, இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் எம்.பி.க்களை சந்தித்து உதவி கேட்டு இருந்தார். ஜெர்மனியில் அந்த நாட்டு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளContinue Reading

(ஏற்கனவே வெளியான செய்தி) ஆகஸ்டு,2- அபின்,கஞ்சா வரிசையில் இப்போது ஸ்மார்ட் போன்களும் புதியதொரு போதைப்பொருளாகி விட்டது. சிறார்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி,சதா சர்வ நேரமும் அதிலேயே கிறங்கிக்கிடக்கிறார்கள். சிறார்கள் என இங்கே குறிப்பிடுவது,பள்ளிக்குழந்தைகளை மட்டுமல்ல,ப்ரிகேஜியில் சேர்வதற்கான வயது கூட முதிராத, பிஞ்சு குழந்தகளையும் சேர்த்துத்தான். விழித்து எழுந்ததும், பால் பாட்டில் கூட தேவை இல்லை- கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எனும் நிலைக்கு , ஸ்மார்ட் போன்கள்,Continue Reading

ஜுலை,29- பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் பிரிந்து தனி நாடாவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கனடாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் நெய்லா குவாட்ரி கேட்டுக் கொண்டு உள்ளார். பாகிஸ்தானில் பிறந்து கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் நெய்லா இந்தியாவின் ஹரித்துவார் நகரத்திற்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பலுசி்ஸ்தான் மாகாணம் விடுதலை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பிரதமர்Continue Reading