தலைப்புச் செய்திகள் (18-04-2024)

*தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் …. 6.23 கோடி. 68,321 பேர் நாளை வாக்களிக்க வாக்கு சாவடிகள் அமைப்பு. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதி.

*நாடளுமன்றத்திற்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு …இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26- ஆம் தேதி.

*தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 17 லட்சம் அதிகம் ..அ முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம்.80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் – 6,14,002;

*68 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3.32 லட்சம் பணியாளர்களை அமர்த்தி நடவடிக்கை… மொத்தம் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 76 பேர்.

*தமிழ்நாட்டில் 19 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்களை தேர்தல் பாதுகாப்பு பணியில் அமர்த்தி உத்தரவு … சென்னையில் இரண்டாயில் துணை ராணுவ வீார்கள் ஆங்காங்கு நிறுத்தம்.

*வாக்குச் சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்றினால்தான் இந்தியா கூட்டணி வெற்றி உறுதியாகும் என்று மு.க.ஸ்டாலின் கடிதம் … வியர்வை சிந்த உழைத்த அனைத்தும் அறுவடை ஆகும் நாள் வாக்குப்பதிவு நாள் என்றும் கருத்து.

*நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு… புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுசுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது.

*மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

*திமுகவை சேர்ந்த கடலூர் மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…மேயர் சுந்தரியின் கணவர் ராஜா, கடலூர் திமுக நகர செயலாளராக உள்ளார் .

*குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கோவை ஈஷா மையத்தில மாயமான வழக்கு விசாரணையை ஜுன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு … ஈஷா மையத்தில் தஙகியிருந்த கணேசன் ஓராண்டாக காணவில்லை என்று அவருடைய சகோதரர் புகார்.

*கணவரை இழந்த ருக்குமணி பழனிவேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செங்கோல் வழங்கலாம் என்ற உத்தரவுக்கு தடையில்லை ..தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றக் மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு மறுப்பு.

*முன்அனுமதி பெற்றவர்கள்தான் பாரம்பரிய முறையில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டுமென்ற மதுரை ஆட்சியரின் ஆணைக்கு தடை …உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

*மேகதாது அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று நிதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தகவல்… மேக தாது அணை கட்டுவதற்காவே தாம் நீர்பாசனத்தறை இலாகாவை ஏற்றிருப்பதாகவும் பேட்டி.

*வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்கக் கோரும் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு … இயந்திரத்தில் பதிவான வாக்குகள் அனைத்தையும் விவிபாட்டுடன் சரிபார்த்தால் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை கண்றிய முடியு் என்பது மனுதாரர்கள் கோரிக்கை.

*பாாஜகவையும் அவர்களுடைய சித்தாந்த் தையும் தோற்கடிக்கப்போகிறோம் என்று ராகுல்காந்தி எக்ஸ் வலைதளத்தில் பதிவு … பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நாட்டின் சித்தாந்திற்கும் கொள்கைக்கும் எதிராக உள்ளனா என்றும் விமர்சனம்.

*பெரும் மழை வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முடக்கம்…நேற்று மட்டும் 290 விமானங்கள் 440 விமானங்களை இயக்குவதில் தாமதம்.

*சென்னையிலிருந்து துபாய்,அபுதாபி, சார்ஜா, குவைத்துக்கு செல்லும் விமானங்களும் இரண்டாவது நாளாக ரதது … முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ஆயிரம் பயணிகள் தவிப்பு.

*இஸ்ரேல் நாட்டிற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் செய்து உள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுளில் ஒரு பிரிவு ஊழியர்கள் போராட்டம் … ஊழியர்கள் 28 பேரை பணி நீக்கம் செய்து கூகுள் உத்தரவு.

*உலகப் புகழ்பெற்ற ஜாகுவர், லேண்ட் ரோவர் கார்களை முழுமையாக தமிழ்நாட்டில் தயரிக்க டாடா மோட்டார் நிறுவனம் திட்டம் … ஒன்பது ஆயிரம் கோடி செலவில் கார் தயாரிப்பு ஆலை அமைக்க உள்ளதாக தகவல்

*சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனை சவரன் விலை ரூ.54,680- ஆக இருந்தது.

*நடப்பு கோடையில் முதன் முதலாக வேலூரில் பகல் நேரம் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவு … திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை,சென்னை போன்ற இடங்களிலும் 100 டிகிரியை தாண்டிய வெப்பதால் பகல் நேரத்தில் அனல் வீசியது.

*தமிழ்நாட்டில் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கணிப்பு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *