
மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்.

மயிலாடுதுறை டி எஸ் பி சுந்தரேசன் பேட்டி வைரலாகி வருகிறது,




லஞ்சம். அறநிலையத்துறை அதிகாரி கைது.

நெல்லை அருகே பள்ளி மாணவன் தற்கொலை. பேருந்துகளுக்கு தீ வைப்பு.

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.
மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்-மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு உயர் அதிகாரிகள் மீது பல்வேறு புகார் தெரிவித்த சுந்தரேசன், கார் வழங்க மறுத்ததாக புகார் அளித்த நிலையில் சஸ்பெண்ட். டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கூறி இருந்த நிலையில் நடவடிக்கை.
மயிலாடுதுறை டி எஸ் பி சுந்தரேசன் பேட்டி வைரலாகி வருகிறது,
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் உயர் அதிகாரிகள் பற்றி கொடுத்த பேட்டி வைராலாகி வருகிறது. முழு பேட்டியை காண இந்த லிங்க- ஐ அழுத்துங்கள்.
லஞ்சம். அறநிலையத்துறை அதிகாரி கைது.
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது. தனியார் கோயில் வருவாய் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார். முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை பெறும் போது, இந்திரா கையும் களவுமாக சிக்கினார். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை.
நெல்லை அருகே பள்ளி மாணவன் தற்கொலை. பேருந்துகளுக்கு தீ வைப்பு.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் மாணவன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுதால் ஆசிரியர்கள் கண்டித்தனர் மனமுடைந்த மாணவன் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தான். ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி நேற்றிரவு உறவினர்கள், மக்கள் மறியல்
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.
இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்* வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். மேலும், இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவர். 1989-ல் ‘நாளைய மனிதன்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி ‘அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.