*இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘இந்திய நீதி பயணம்’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறார் ராகுல் காந்தி. 14 மாநிலங்களில், 6200 கி.மீ. தூரம் பயணித்து மும்பையில் மார்ச் 20-ம் தேதி பயணம் முடிவடையும் என்று காங்கிரஸ் தகவல்.
*சென்னை எண்ணூர் அருகே உள்ள கோரமண்டல் என்ற தனியார் உர நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வர கடலுக்கடியில் பதித்துள்ள குழாய்களில் வாயு கசிந்ததால் பெரும் பரபரப்பு .. இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட வாயுக்கசிவால் சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், மற்றும் பர்மா நகரில் 30 பேர் மயக்கம், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை.
*கோரமண்டல் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியம் எடுத்து வருவதற்கு பதிக்கப்பட்டு உள்ள குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது…. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதும் தெரியவந்தது.
*தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு.,,,கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு.
*கோர மண்டல் உரத் தொழிற்சாலை முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டம் .. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு.
*சென்னை எண்ணூர் சுற்றுவட்டாரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரசாயாண ஆலைகளிலும் பாதுகாப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல் … வாயுக் கசிவு ஏற்பட்ட இடங்களில் தேசி பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு.

*சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் பெருமாள் என்பவர் உயிரிழப்பு.
*காஞ்சிபுரத்தில் போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொலை… காஞ்சிபுரம் புதிய ரயில்வே பாலம் அருகே பதுகியிருந்த ரவுடிகள் ரகு, கருப்பு அசான் இருவரையும் பிடிக்கப்போன போலீஸ்காரர்களை தாக்கியதால் என் கவுண்டர்.
*சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள் இருவரும் காஞ்சிபுரத்தில் பிரபாகரன் என்ற ரவுடி நேற்று வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு உடையவர்கள் … என் கவுண்டர் மூலம் பிரபாகரன் – ரகு என்ற இரு ரவுடிகளின் கும்பல் இடையேயான மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக போலீஸ் தகவல்.
*காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி .. பொது மக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி.
*சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள துணை வேந்தர் ஜெகநாதன் இல்லத்தில் போலீஸ்காரர்கள் சோதனை … பல் வேறு புகார்களின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட ஜெகநாதன் ஜாமீனில் விடுவிக்கப்ட்டாலும் ஆதராங்களை சேகரிக்க காவல் துறை நடவடிக்கை.
*தமிழகத்தில் இணை நோய் தொடர்பான பரிசோதனைக்கு வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனாவின்ஜெ.என்.1 வகை தொற்று உறுதி… நான்கு பேரும் திருவள்ளூர், திருச்சி, கோவை மற்றும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.
*“தென் மாவட்டங்களிலும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை” என்று கோவையில் எடப்பாடி பழனிசாமி புகார் … அதிமுக ஆட்சியில் மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும் பேட்டி.
*இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்கு தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு …முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தது நடைமுறைக்கு வந்தது.
*நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தக் கோரிக்கை … மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று திருமாவளவன் புகார்.
*கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவைளை டிசம்பர் 30-ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…. கோவையில் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக காலை 11.30 மணி அளவில் பெங்களூரு சென்றடையும்…. பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களுரூவில் புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை திரும்பும்.
*சிறைக் கைதிகள் விடுப்பு கோரும் மனுக்களில் பரோல் என்பதை குறிப்பிடாமல் சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு என்று குறிப்பிடுமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு….. பரோல் என்ற வார்த்தையும், அதன் விதிமுறைகளும் இங்கு கடைபிடிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் விளக்கம்.
* மக்களவைத் தேர்தல் பற்றி ஆலோசனை நடத்த தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் நாளை மறுதினம் டெல்லிக்கு வருமாறு கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அழைப்பு … தொகுதிப் பங்கீடு, போட்டியிட விரும்பும் தொகுதிகள், அரசியல் நிலவரம் உள்ளிட்டவை பற்றி முடிவு செய்ய திட்டம்.
*சிறு,குறு தொழில்களுக்கான மின் கட்டணத்தை குறைக்கக் கோரிக்கை ,, கும்பகோணம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை,சிவகாசி உட்பட பல இடங்களில் மனித சங்கிலி போராட்டம்.
*பொங்கல் பண்டிகையின் போது ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பதால் வெளியூர் செல்ல விரும்புகிறவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு .. சென்னையில் இருந்து புறப்படும் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாக தகவல்.
*கேரளாவில் பெரியார் பங்கேற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நாளை .. சென்னையில் நாளை நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராய் விஜயன் இருவரும் பங்கேற்பு.
*M.Phil அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை என்று கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது ..சில பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் M.Phil-க்கு மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து, மானியக் குழு சுற்றறிக்கை.
*பெங்களூரில் கடைகளில் பிற மொழியில் வைக்கப்பட்டு உள்ள பெயர் பலகைகளை உடைத்து கன்னட அமைப்பினர் போராட்டம் .. கன்னடத்தில் பெயர் பலகைகைளை வைக்குமாறு கடந்த வாரம் அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றக் கோரிக்கை.
*டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று நிகழ்ந்த லேசான குண்டுவீச்சு தொடர்பாக போலீ்ஸ் விசாரணை தீவிரம் ,, இளைஞர்கள் இருவர் குண்டுகளை வீசிவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு.
*தலைநகர் டெல்லியில் கடுமையான பனி மூட்டத்தால் காலையில் 100 விமானங்கள் தாமதமாக இயக்கம் .. வெளி மாநில ரயி்ல்களும் டெல்லிக்கு தாமதாக வந்த சேர்ந்தன.
*உத்திர பிரதேசத்தில் கடுமையான பனி மூட்டத்தால் சாலை விபத்துகள் .. ஆறு பேர் உயிரிழப்பு.
*ராகுல் காந்தி அரியானா மாநிலத்தில் உள்ள மல்யுத்த பயிற்சிக் கூடத்திற்கு சென்று மல்யுத்த வீரர்கள் உடன் சந்திப்பு… பாஜக எம்.பி.யும் மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வீரர்களின் கருத்துகளை கேட்டதாக தகவல்.
*இந்திய மல்யுத்த சங்கத்தை மத்திய விளயைாட்டு அமைச்சகம் கலைத்ததை அடுத்து தற்காலிக மல்யுத்த சங்கத்தை அமைத்து ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை… புபேந்தர் சிங் தலைமையிலான சங்கத்தில் எம்.எம்.சவுமியா, மஞ்சுஷா கண்வர் உறுப்பினர்களா சேர்ப்பு.
*இந்தியாவில் ஒரே நாளில் 529 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு .. நாடு முழுவதும் கொரானே தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4093 ஆக அதிகரிப்பு.
*காஷ்மீரில் கடந்த வாரம் தீவிரவாதிகளால் நான்கு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் .. எல்லை ஓர பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றி ஆய்வு.
*ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை சந்தித்து ராஜ்நாத் சிங் ஆறுதல் .. ராணுவ வீரர்களிடம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பொது மக்ககளின் மனதை வெல்லும் பொறுப்பும் உள்ளதாக அறிவுறுத்தல்.
*ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதிப்பு…. வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள ‘Pulse Oximeter’ தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக புகார்.
*’Pulse Oximeter’ தொழில் நுட்பத்துக்கான காப்புரிமை Masimo என்ற நிறுவனத்திடம் உள்ளது .. .. மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு.


*ஆஸ்கர் விருது வென்ற PARASITE என்ற கொரிய படத்தில் நடித்த LEE SUN KYUN என்ற கொரிய நடிகர் மர்ம மரணம் .. சியோலில் காரில் மயங்கிக் கிடந்த நடிகர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் தகவல்.
*”கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு … சென்னை வானிலை ஆய்வு மையம்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *