தலைப்புச் செய்திகள் (16-04-2024)

*பிரச்சாரத்துக்கு இன்னும் ஒரு நாளே எஞ்சி இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பு .. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம்.

*நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் …. நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை.

*பிரச்சாரம் நாளை மாலை ஓய்ந்த உடன் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு … விதிகளை மீறினால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.

*மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது … தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கு அனுமதி தரப்பட்டிருந்தது.

*தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிப்பு… பூத் சிலிப் கிடைக்காதவர்கள், Voter Helpline என்ற மொபைல் செயலியில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தல்.

*வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் வீடு, வீடாகச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு … துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து திமுக வேடபாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை.

*நீட் தேர்வை கொண்டு வந்து அறிமுகப்படுத்திய பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் … தருமபுரியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உள்ளுர் வேட்பாளரான அசோக்குக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள்.

*நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மு.க. ஸ்டாலின் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட பெசன்ட் நகரில் நாளை மாலை நிறைவு செய்கிறார் … அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நாளை மாலை நடை பெறும் பொதுக்கூட்டதோடு பரப்புரையை நிறைவு செய்திட திட்டம்.

*புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்தில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என்று காவல்துறை உறுதி … வேங்கை வயல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு..சம்பவம் நடந்து 15 மாதங்களாகியும் விசாரணையை முடிக்காதது குறித்து நீதிபதிகள் கேள்வி.

*சென்னை ஆவடி அருகே நகைக் கடையில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் வட மாநில கொள்ளையருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகம் … எட்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை.

*சத்தீஸ்கர் மாநிலம் கல்யான் மாவட்டத்தில் முக்கிய தலைவர் சங்கர் ராவ் உட்பட மாவோயிஸ்ட்டுகள் 18 பேர் சுட்டுக் கொலை … ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல்.

*பொதுமக்களிடம் மன்னிப்பு கோரி பதஞ்சலி நிறுவனம் தரப்பில் விளம்பரங்கள் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் தரப்பு தகவல்… நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் தொடர்ந்து பொய்யான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என பாபா ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.

*பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைப்படம் உள்ளது என்று பீகாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு …. இந்தியா கூட்டணிக்கு தொலைநோக்கும் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை என்றும் புகார்.

*இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்பட்டு ராணுவத்திற்கு பழைய முறையில் ஆள் சேர்ப்பு நடைபெறும் ராகுல் காந்தி உறுதி …. அக்னிபாத் திட்டம் நாட்டைக் காக்க வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்ளை அவமதிப்பதாகவும் கருத்து.

*ஊழல் புகார் கூறும் பிரதமர் மோடி முதலில் கண்ணாடியை பார்க்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் … மேற்கு வங்கத்திற்கு ஊழலைக் கண்டுபிடிக்க எந்த ஒரு குழுவும் ஊழலைக் கண்டுபிடிக்கவில்லை என்றும் கருத்து.

*மத்திய அரசு தேர்வாணையம் கடந்த செட்டம்பர் மற்றும் ஜனவரியில் நடத்திய தேர்வு முடிவுகளை வெளிட்டது .. நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ், ஐ,பி,எஸ் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு 1016 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு.

‘*ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55,000-ஐ நெருங்கியது … ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,870க்கு விற்பனையாகிறது.

*பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தமது மகள் சுகைனா கானை கதாநாயாகியாக அறிமுகப்படுத்த முடிவு … மகளுக்காக ரூ 200 கோடி செலவில் இந்தி திரைப்படம் தயாரிக்க திட்டம்.

*நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தில் பாகுபலி பட புகழ் தானா டகுபதிக்கு வில்லன் வேடம் … அக்டோபரில் தொடங்கிய வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்தது.

*தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு… சேலம், திருச்சி, நாமக்கல் நகரங்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *