ஜுலை, 28- எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று முகநூல் நண்பரை  திருமணம் செய்து கொண்ட அஞ்சுவின் இந்திய கணவர் அரவிந்த் அல்வாரில், தாங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை, எனவே, அவரால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்து பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அரவிந்தும் அவருடைய மனைவி அஞ்சுவும்(வயது 34 ) ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்Continue Reading

ஜுன், 27- உலகில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.  கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பதவியில் இருந்த அவர்,  தனது மூத்த மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். கம்போடியாவில் ஹுன் சென் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். அவர்,  தான் அதிகாரத்தில் இருப்பதை எதிர்க்கும் அனைவரையும்Continue Reading

ஜுலை,27- அபின்,கஞ்சா வரிசையில் இப்போது ஸ்மார்ட் போன்களும் புதியதொரு போதைப்பொருளாகி விட்டது. சிறார்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி,சதா சர்வ நேரமும் அதிலேயே கிறங்கிக்கிடக்கிறார்கள். சிறார்கள் என இங்கே குறிப்பிடுவது,பள்ளிக்குழந்தைகளை மட்டுமல்ல,ப்ரிகேஜியில் சேர்வதற்கான வயது கூட முதிராத, பிஞ்சு குழந்தகளையும் சேர்த்துத்தான். விழித்து எழுந்ததும், பால் பாட்டில் கூட தேவை இல்லை- கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எனும் நிலைக்கு , ஸ்மார்ட் போன்கள், மழலைகளை விழுங்கி விட்டது.Continue Reading

ஜுலை,25- எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.  “இந்தியன் முஜாஹிதீன்”, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” போன்ற அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அதனால் பெயரால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை என்று மோடி தெரிவித்து இருக்கிறார். பாரதீய ஜனதா கட்சி  எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மோடி.”இதுபோன்ற திசையற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை”Continue Reading

ஜுலை- 24- இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களில்  மழை வெளுத்து வாங்கியதால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும்  வகையில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கான தடை அமெரிக்காவில் பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. ’’இந்தியா அரிசிContinue Reading

ஜுலை, 18 -இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கன மழையினால் தலைநகர் டெல்லிக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது  உலகத்தின் பல நாடுகளில் வெயில் கொடுமை இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. இந்த வெப்ப அலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பானை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி இதுவரை இல்லாத வெப்பத்தை அனுபவித்து வருகிறது. ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்டContinue Reading

சொந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிப்பதை, வெளிநாடு சென்றால் , சொற்ப ஆண்டுகளில் அள்ளி விடலாம் என்ற கனவில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர்  விமானம் ஏறி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஆண்கள்தான் வெளிநாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். அண்மைக்காலமாக பெண்களும் வெளிநாடுகளுக்கு பறந்த வண்ணம் உள்ளனர். வீட்டு வேலைக்கு என  அந்நிய தேசங்களுக்கு ,குறிப்பாக அரபு நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படும் பெண்கள், அங்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Continue Reading

ஜுலை,05-  பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் என்ற நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மூன்றாவது நாளாக கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் திங்கட்கிழமை ஜெனின் நகரம் மீது மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் ராணுவம் வான் வழித் தாக்குதலை  மேற்கொண்டது.  குண்டு வீச்சுக்கு ஆளாகி 10 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும்16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பாலஸ்தீன அதிகாரிகள்Continue Reading

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை பிரபல பாடி பில்டர் ஜோ லிண்டரி்ன் திடீர் மரணம் நிரூபித்து உள்ளது. உடலை கட்டுக் கோப்பாக, முறுக்காக வைத்துக் கொள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் முப்பது வயதில் மரணம் அவரை தழுவிய செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. ஜோ லிண்டன் முப்பதே வயதில் ரத்த நாளம் வெடித்து இறந்துவிட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  அவர் கட்டுடலை விதவிதமாக வீடியோContinue Reading

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கலவரத்தில் இது வரை காவல் துறை அதிகாரிகள் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர். தீவைப்பு, கொள்ளை அடிப்பது, சாலைகளில் தடுப்புகளை போட்டு போக்குவரத்தை முடக்குவது போன்ற செயல்கள் நான்கு நாட்களாக நீடிக்கிறது. முந்தைய இரவுகளுடன் ஒப்பிடும்போது வெள்ளிக்கிழமை இரவு நிலைமை சற்று அமைதியானதாகத் தோன்றினாலும், நாடு முழுவதும் பல நகரங்களில் கொந்தளிப்பான சூழல்தான் காணப்படுகிறது. பாரிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் கடந்த செவ்வாய்கிழமைContinue Reading