கட்டுடலுக்காக ஆபத்தான மருந்து.. உலகின் பிரபல ‘பாடி பில்டர்’ ஜோ லிண்டன் மரணம் சொல்லும் செய்தி.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை பிரபல பாடி பில்டர் ஜோ லிண்டரி்ன் திடீர் மரணம் நிரூபித்து உள்ளது. உடலை கட்டுக் கோப்பாக, முறுக்காக வைத்துக் கொள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் முப்பது வயதில் மரணம் அவரை தழுவிய செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

ஜோ லிண்டன் முப்பதே வயதில் ரத்த நாளம் வெடித்து இறந்துவிட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  அவர் கட்டுடலை விதவிதமாக வீடியோ எடுத்து யூ டியூபில் வெளியிடுவதன்மூலம் பிரபலமாக விளங்கினார்.அவரை சமூக வலை தளமான இன்ஸ்டா கிராமில் 84 லட்சம் பேர் பின் தொடந்தனர். இதற்காகவே  ஜோ லிண்டன், கட்டுடல் அடைவதற்காக ஸ்டீராய்டு வகை மருந்துகளை பயன்படுத்தி வருவதாக கூறியிருந்தார்.

கடந்த வாரம் ஜோவுக்கு கழுத்தில் கடுமையான வலி ஏற்பட்டு இருக்கிறது. அவர் அதற்காக ஒன்றும் பயப்படாமல் அடுத்த வீடியோவை எப்படி எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தார் ஆனால் அன்யூரிசம்  ((aneurysm)) என்று அழைக்கப்படும் ரத்த நாளம் வெடிப்பால் மரணம் அடைந்துவிட்டார். இதனை அவருடைய பெண் தோழி நிச்சா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்து உள்ளார். ஜோ லிண்டன் எப்போதும் தன்னுடனும் மற்றவர்களுடனும் அன்புடன் இருந்ததாக நிச்சா அவரை புகழ்ந்து இருக்கிறார்.

இதனை படித்த வலை தள வாசிகள், “நீங்கள் ஜோவிடம் ஸ்டிராய்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று தடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்” என்று கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

உண்மை தானே நிச்சா !

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *