(ஏற்கனவே வெளியான செய்தி) ஆகஸ்டு,2- அபின்,கஞ்சா வரிசையில் இப்போது ஸ்மார்ட் போன்களும் புதியதொரு போதைப்பொருளாகி விட்டது. சிறார்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி,சதா சர்வ நேரமும் அதிலேயே கிறங்கிக்கிடக்கிறார்கள். சிறார்கள் என இங்கே குறிப்பிடுவது,பள்ளிக்குழந்தைகளை மட்டுமல்ல,ப்ரிகேஜியில் சேர்வதற்கான வயது கூட முதிராத, பிஞ்சு குழந்தகளையும் சேர்த்துத்தான். விழித்து எழுந்ததும், பால் பாட்டில் கூட தேவை இல்லை- கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எனும் நிலைக்கு , ஸ்மார்ட் போன்கள்,Continue Reading

ஆகஸ்டு,1- மணிப்பூர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வேதனை தெரிவித்து உள்ளர். அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் போது குகி சமூகத்துப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ  பத்து நாட்களுக்கு முன் வெளியானது.  அந்தப் பெண்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதுContinue Reading

ஜுலை,30- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடங்கிய மே 3- ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களைச் சந்தித்தது.Continue Reading

ஜுலை,29- பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் பிரிந்து தனி நாடாவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கனடாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் நெய்லா குவாட்ரி கேட்டுக் கொண்டு உள்ளார். பாகிஸ்தானில் பிறந்து கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் நெய்லா இந்தியாவின் ஹரித்துவார் நகரத்திற்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பலுசி்ஸ்தான் மாகாணம் விடுதலை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பிரதமர்Continue Reading

ஜுலை,29- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில்  ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.  மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனதுContinue Reading

ஜுலை, 29- தமிழ் சினிமாவில் பெண் வேடமிட்டு பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஆணழகன் படத்தில் பிரசாந்துக்கு பெண் வேடம் கச்சிதமாக பொருந்தி இருந்தது. பாட்டாளி, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட 10 படங்களில் வடிவேலு பெண் வேடமிட்டு கலக்கி இருந்தார். ஆயிரம் இருந்தாலும் அவ்வை சண்முகியில் கமல்ஹாசன் போட்ட பெண் வேடம்,’அடிச்சுக்க ஆளில்லை’ ரகம். கடந்த 1996-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்  வெளியான  ‘அவ்வை சண்முகி’யில் வயதான பெண் வேடத்தில்Continue Reading

பெரிய நடிகர்கள் படங்களில், அண்டை மாநில உச்ச நட்சத்திரங்கள் கவுரவ வேடங்களில் நடிப்பது புதிய விஷயமல்ல. ரஜினியின் மாப்பிள்ளை படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி, சண்டை காட்சி ஒன்றில் நடித்திருந்தார். சரத்குமார் நடித்த நாட்டாமை படம் தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.மோகன்பாபு கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார். இந்நிலையில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில், சிறப்புத்தோற்றத்தில் விஜய் நடித்துள்ளதாக தகவல்Continue Reading

ஜுலை,28- நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, இரண்டை முடித்து கொடுத்து விட்டார். நெல்சன் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த மாதம்  10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் ரஜினிக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது. அடுத்து லைகா தயாரிப்பில், ஞானவேலுContinue Reading

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்-இந்தியன். இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘இந்தியன் 2’கொரோனா, நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து ஒருபடியாக நிறைவடைந்து விட்டது. கமல்ஹாசன் தவிர, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.Continue Reading

ஜுலை, 26- பெயருக்கு ஏற்றபடி தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர், ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்க முடிவு செய்தார். இந்தபடத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர்  பிரதான கதாபாத்திரங்களில் வந்தனர்.. இளையராஜா இசையமைத்த இந்தப்படம் அனைத்துContinue Reading