பல்கலைக் கழகங்களில் பணம் இல்லை, மாதச் சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாட்டம்.

ஆகஸ்டு,05-

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேரவை கூட்டம் துணைவேந்தர் ந.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு பணம் இல்லாமல்  திண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், கவலை தெரிவித்தனர். நிதி நெருக்கடியில் பல்கலைகழகம் தத்தளிப்பது குறித்து உறுப்பினர் நாகராஜன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“தமிழகத்திலுள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 28 துறைகள் செயல்படுகின்றன. .

78 லட்சம் ரூபாய் மட்டுமே 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசாங்கம் வழங்குகிறது. ஆனால் .5 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது.

இங்கு பணியாற்றுவோருக்கு ஊதியம் அளிக்க நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும், ஓய்வு ஊதியம் கொடுப்பதிலும் பல்வேறு பிரச்சினைகளை பல்கலைகழகம் சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த 2017-ஆ ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதியை அரசு அளிப்பதில்லை.

பல்கலைக்கழகங்களை மூச்சுத்திணற வைப்பது அரசுக்கு அழகல்ல. எனவே தமிழக நிதிச்செயலரை சந்தித்து பல்கலைக்கழக நிதிநிலையை எடுத்துக்கூறி நிதியை பெறுவதற்கு குழுவை அமைக்க வேண்டும்’’

இவ்வாறு உறுப்பினர் நாகராஜன் தெரிவித்தார். அவரது கருத்தை  சக உறுப்பினர்களும் ஆமோதித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது/

இது மனோனமணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கதை. சென்னை பல்கலைக் கழகத்திலும் இதே போன்ற நிலை  உள்ளது என்பதை அந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசியரர் ஒருவர் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார். மற்ற பல்கலைக் கழகங்களிலும் விசாரித்தால் இன்னும் மோசமான தகவல் கிடைக்கக் கூடும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *