*நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள்….. சென்னையில் அறிவாலயத்தில் முக ஸ்டாலினுடன் கேசி வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை முடிவில் ஒப்பந்தம் கையெழுத்து..
*திமுக கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு இப்போது தொகுதி இல்லை. .. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலின் போது ஒரு இடத்தை தருவதாக திமுக உறுதி… முக ஸ்டாலினுடன் கமல் ஹாசன் நடத்திய பேச்சில் உடன்பாடு.
* நாடாளுமன்றத்தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுப் போக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது… கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்து கொள்ள திட்டம்.
*போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்து சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கைது செய்தது போதைப் பொருள் தடுப்புத் துறை … ராஜஸ்தானில் பதுங்கியிருந்தவரை பிடித்துவிட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் சென்னையில் பேட்டி.
*போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம்….ஜாபர் சாதிக் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது.. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளதாகவும் ஞானேஷ்வரி விளக்கம்.
*ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப் பொருளை உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு கடத்தியுள்ளார்… ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரி விளக்கம்..
*தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் கடத்தல் மூலம் 4,370 கோடி புழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தகவல் .. சட்ட விரோத பணப்புழக்கத்திறகு காரணமான மணல் வியாபாரிகள் மீது விரைவில் வழக்குப் பதியப்படலாம் என்று தகவல்.
*மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காலியான 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும், படித்தவர்கள் பயிற்சி பெறுவது தங்கள் உரிமை என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்படும், ஆன்லைன் டெலிவரி பணியாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் சமுதாயப் பாதுகாப்பும் ஏற்படுத்தபடும் … காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ள அம்சங்கள் குறித்து ப.சிதம்பரம் சென்னையில் விளக்கம்.
*மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு…வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கடந்த 2000-ஆம் ஆண்டில் ‘ஸ்திரிசக்தி’ புரஸ்கார் விருது பெற்றவ சின்னப்பிள்ளை, பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படவில்லை என்றுப் பேட்டி அளித்திருந்ததை கண்ட முதலமைச்சர் நடவடிக்கை.
*பள்ளிக் கல்வித்துறை பற்றி விமர்சனம் செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ள ஆசிரியை உமா மகேஸ்வரியை மீண்டும் பணியில் சேர்க்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்… ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தியதற்காக உமா மகேஸ்வரியை நீக்கியது தவறு என்றும் கருத்து.
*முன்னாள் அமைச்சர் பொன்முடி தனக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்துச் செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீது திங்கள் கிழமை விசாரணை நடத்துவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு… தண்டனை ரத்து செய்யப்பட்டால் பொன்முடி மீண்டு்ம் அமைச்சராக முடியும், இல்லையேல் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.
*குருப் – 4 பிரிவில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத 20 லட்சம் பேர் விண்ணப்பம் … ஒரு இடத்திற்கு 326 பேர் போட்டி.
*ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 21- ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மவாட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு.
*பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தானியங்கி தண்ணீர் வழங்கும் மையங்களில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என்று விளம்பரம் … தட்டுப்பாடு காரணமாக காலை மற்றும் மாலையில் மட்டுமே ஒரு கேண் ஐந்து ரூபாய்குக் ஒரு கேன் தண்ணீர் விற்கப்பட்டு வந்த நிலையில் இப்போது ஒரு கேன் மட்டுமே என்ற அறிவிப்பால் பொது மக்கள் அதிர்ச்சி.
*பெங்களூருவில் கடந்த ஒன்றாம் தேதி குண்டுவெடிப்புக்கு ஆளான ராமேஷ்வரம் கப்பே ஒரு வாரத்திற்குப் பின் திறப்பு … குண்டு வைத்தவன் பற்றி துப்புத் துலங்காததால் என்.ஐ.ஏ. தொடர்ந்து விசாரணை.
*தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தாக்கல் செய்வதற்கு ஸ்டேட் வங்கி ஜுன் மாதம் வரை அவகாசம் கேட்டது தொடர்பான வழக்கை திங்கள் கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அமர்வு .. ஸ்டேட் வங்கி கேட்கும் அவகாசம் கிடைக்குமா அல்லது தகவல்களை உடனே தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பதால் பெரும் எதிர்பார்ப்பு.
*வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணம் … அசாம் மாநிலத்தின் கசிரங்கா பூங்காவில் யானை மீது சாவரி செய்து அதற்கு உணவூட்டி மகிழ்ந்தார் பிரதமர்.
*இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் பட்டினியில் தவிக்கும் காசா மக்களுக்காக அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை அளித்தபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சோகம்… அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டதாக புகார்.
*முதன் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ 50 ஆயிரத்தை நெருங்குகிறது … க டந்த ஐந்து நாட்களில் சவரனுக்கு ரூ 1760 கூடியது.
*இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி … 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.. 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸில் 195 ரன்கள் மட்டுமே பெற்று ஆட்டமிழந்தது இங்கிலாந்து.
*சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் ஆண்டர்சன் சாதனை…டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447