*நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி வேட்பாளர் … காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்காக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது .. சசி தரூர் மீண்டும் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளர்..
*நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு … சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் நடத்திய சந்திப்பில் உடன்பாடு.
*இரண்டு தொகுதிகளை கேட்ட மதிமுகவிற்கு ஒரு தொகுதியை மடடும் வழங்கி ஒப்பந்தம் செய்தது திமுக … ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மாநிலங்களவை தேர்தல் போது ஒரு இடத்தை தங்களுக்கு ஒதுக்குவது பற்றி முடிவாகும் என்று வைகோ பேட்டி.
*விருதுநகர் அல்லது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்குமாறு வைகே வலியுறுத்தியதாக தகவல் .., இரண்டு தொகுதிகளிலும் கடந்த முறை வென்ற காங்கிரஸ் விட்டுக் கொடுக்குமா என்பதில் சந்தேகம்.
*தேர்தல் ஆவணங்களில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு … ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் போல, கட்சியின் ஆவணங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
*நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேப்பதற்கு QR CODE அறிமுகம் …முதல் உறுப்பினராக இணைந்தார் கட்சியின் தலைவர் விஜய்… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கையுடன் உறுப்பினராக இணையுமாறு விஜய் வேண்டுகோள்
*கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது”-. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவின் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
*ஔவையார் விருது பெற்ற எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் வாழ்த்து.. மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்கு பாமா பங்காற்றியவர் என்று பாராட்டு.
*தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார். போதைப்பொருட்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கருத்து.
*பள்ளிக் கல்வித் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் புதிய கல்விக் கொள்கையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த ஆசிரியை உமா மகேசுவரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத் தக்கது என்று சீமான் அறிக்கை … மீண்டும் பணி வழங்குமாறு வலியுறுத்தல்.
*கடந்த 9 நாட்களாக மறியல் போராட்டங்களை நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் வாபஸ்…. முதல்வர் விரைவில் அழைத்து பேசுவார் என்று நம்புவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேட்டி.
*திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறையி்ல் உள்ள அமலாக்த்துறை அதிகாரி அங்கிட் திவாரி ஜாமீன் மனு மீது 16 – ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை … திண்டுக்கல் நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்க மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் அங்கிட் திவாரி.
*வழக்கு ஆவணங்களில் பட்டப்பெயர்கள் சேர்க்கும் நடைமுறையை நிறுத்துவதற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க காவல்துறை உயரதிகாரிகளுக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு … வழிப்பறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவணனை, குரங்கு என்ற அடைமொழியுடன் குறிப்பிட்டதற்கு நீதிபதி அதிருப்தி.
*பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் … ராமநாதபுரம், காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டு.
*சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தால் கடைகள் அடைப்பு ….கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதால் இயல்பு வாழ்க்கப பாதிப்பு.
*கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்கா வாங்கிய வீட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக உசேன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கு ரத்தாகிறது .. சமரசம் ஏற்பட்டுவிட்டதாக பாபி சிம்கா தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல்.
*மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ₹100 குறைப்பு … பிரதமர் மோடி ‘X’ வலைதள பக்கத்தில் அறிவிப்பு.
* காங்கிர்ஸ் கட்சிக்கு வருமான வரித்துறை விதித்த ரூ 210 கோடி அபராதத்தை ரத்து செய்ய வருமான வரித்துறை தீர்ப்பாயம் … உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான் அறிவிப்பு.
*பெங்களூரில் 20 ஆண்டுகளில் இல்லாத குடி நீர் பஞ்சம் நிலவுவதால் கட்டிடம் கட்ட, கார் கழுவ, தோட்ட வேலை போன்றவற்றுக்கு தண்ணீர் எடுக்கத் தடை… . தனியார் பள்ளிகள் ஆன் லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு
*மணிப்பூர் மாநிலத்தில் தோவ்பாய் மாவட்டத்தில் கோன்சோம் கேதா சிங் என்ற ராணுவ அதிகாரி அவருடைய வீட்டில் இருந்து மர்ம நபர்களால் கடத்தல் … கடந்த சில மாதங்களாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் கடத்தப்பட்ட அதிகாரியை தேடும் பணி தீவிரம்.
*டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய படைப்பாளிகளுக்கான விருது பெற்ற தமிழ்நட்டைச் சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி என்பவர் பிரதமர் மோடியின் காலை தொட்டு மரியாதை …பதிலுக்கு மோடியும் கீர்த்திகாவின் காலை மூன்று முறை தொட்டுவணங்கிய வீடியோ வலைதளங்களில் வைரல்..
*ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதை விமர்சிப்பதும் பாகிஸ்தானியர்களின் சுதந்திர தினத்தை வாழ்த்துவதும் குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து …ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது .. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்ட தினத்தை கருப்பு நாள் என வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்ததற்காக பேராசிரியர் மீதான வழக்கை ரத்து செய்தும் உத்தரவு.
*இன்போசி்ஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் பிரட்டன் பிரதமர் ரிஷி சுனாக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை உளுப்பினராக நியமனம் … சுதா மூர்த்தியின் நாடாளுமன்றப் பணிகள் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து.
*கடந்த 2013 – ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் எதோச்சதிகாரம் நிலவுவதாக வி- டெம் என்ற அமைப்பு தகவல் … உலக அளவில் எதோச்சதிகாரம் அதிகம் நிலவும் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் கருத்து.
*தர்மசாலாவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரா ன ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து விலுவான நிலையில் இந்திய அணி … ரோகித் சர்மா 103 ரன்களும் சுப்மன் கில் 110 ரன்களும் குவித்து சிறப்பான ஆட்டம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447