தலைப்புச் செய்திகள் (19-03-2024)

*நாடாளுமன்றத் தேர்தல் மாாச் 14 அல்லது 15 ஆம் தேதி அறிக்கப்படலாம் என்று தகவல் .. ஆறு அல்லது ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு.

*தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தர் ஆணையர் அருன் கோயல் விலகி உள்ளது பற்றி மல்லிகாஜுன காா்கே விமர்னம் .. தேர்தல் கமிஷனா அல்லது ஓமிஷனா என்று கேள்வி.

*மன்னார் வளைகுடாவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை.. அனைவரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை.

*சென்னையில் வி.சி.க. துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை … சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக விசாரணை.

*டெல்லியை நோக்கி பேரணி என்ற போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகள் அழைப்பை ஏற்று நாட்டின் பல இடங்களில் ரயில் மறியல் … டெல்லி மற்றும் சுற்று வட்டராங்களில் தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கம். போக்கு வரத்து பாதிப்பு.

*மக்களவை தேர்தலில் தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி தொகுதிகளுக்கு திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னைியில் அறிவாலயத்தில் நேர்காணல் .. வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட விவரங்களை மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் கேட்டறிந்தனர்.

*தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியிடம் நேர்காணல் … வேறு யாரும் மனு கொடுக்காததால் கனிமொழிக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைப்பது உறுதியானது.

*மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணலை தொடங்கினார் .. முதல் நாளான இன்று ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தர்களிடம் நிறைவு.

*தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும், ‘வேட்பாளர் தான் தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் … எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துக் கொண்டிருப்பதாக புகார்.

*தமிழகத்தில், கடந்த சில நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்த விவரத்த்தை ஆளுநரை சந்தித்து வழங்கினார் எடப்பாடி பழனிசாமி ,,, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.

*நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலியில் 50 லட்சம் பேர் உறுப்பினாகளாக சேர்ந்து உள்ளதாக அறிவிப்பு …பெண்கள் அதிக ஆர்வத்துடன் சேருவதாக பெருமிதம்.

*நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் 42 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்தார் மம்த பானர்ஜி … நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பணம் வாங்கியதாக புகாருக்கு ஆளான மொய்வா மொகுத்ராவுக்கு கிருஷ்ணா நகர் தொகுதியி்ல் மீண்டும் வாய்ப்பு.

*அரியானா மாநிலம் சிசார் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் டெல்லியில் கார்கே முன்னிலையில் காங்கிரசி்ல் சேர்ந்தார்.. விவசாயிகள் பிரச்சினை, ராணுவத்திற்கு ஆள் எடுப்பது போன்றவற்றில் பாஜகவின் அணுகுமுறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று புகார்.

*குடும்பத்தில் உள்ள ஆண்கள் பாஜகவிற்கு வாக்களிக்காமல் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டியது பெண்களின் கடமை என்று அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் … பாஜகவிற்கு வாக்களிக்கும் ஆண்களுக்கு சோறு போட வேண்டாம் என்றும் வேண்டுகோள்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *