யமுனை பெருக்கெடுத்து ஓடுகிறது, டெல்லியில் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. மற்ற மாநிலங்களிலும் நிலமை மோசம்.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து  கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

டெல்லியில்  நேற்று காலை எட்டு மணியுடன் முடிவடடைந்த 24 மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பெய்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழையாகும். மேலும் இமாச்சல பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில பெய்து வரும் கனமழையால் யமுனா ஆறு தொடர்ந்து கரை புரண்டு ஓடுகிறது. பல இடங்கில் தண்ணீர் கரையை மீறி தாழ்வான இடங்குளுக்குள் புகுந்து உள்ளது. டெல்லி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி படகில் சென்று ஆய்வு செய்தார்.

டெல்லியில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கனமழையை சமாளிப்பதற்கான கட்டமைப்புகள் டெல்லியில் போதுமான அளவு இல்லை என்று கூறியிருக்கிறார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில  கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கரையோரம் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. மண்டியில் இருந்து குலுவுக்குச் செல்லும் சாலையின் பல இடங்களை பியாஸ் ஆற்றின் வெள்ளம் மூழ்கடித்து இருக்கிறது. மலைப் பகுதிகள் நிறைந்த மாநிலம் என்பதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மண் மூடிக்கிடக்கின்றன.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் கன மழை பெய்தாலும் கூட ரூப் நகர் மாவட்டம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் தாழ்வான இடங்களை வெள்ளம சூழ்ந்து உள்ளது.அங்கு வசித்தவரர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

உத்தர்கண்ட்  மாநிலத்தில் கங்கை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆன்மீக மையங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

பல மாநிலங்களில் ஏற்பட்டு உள்ள வெள்ளப் பாதிப்புக் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்,  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை அனுப்புமாறும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

பருவ மழை ஓய்ந்தாலும் இயல்புநிலை திரும்புவதற்கு குறைந்தது ஒரு வாரம் ஆகலாம்.

000ள

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *