*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செயது பரபரப்பு தீர்ப்பு.

*இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு தடை விதிக்க ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை ஏற்புடையது அல்ல..சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதி கருத்து.

*ராகுல் காந்தி வழக்கை அரசியல் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை.. காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கருத்து.

*பெண்களுக்கு மாதம் ரூ ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெயர்வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. யார்,யாருக்கு ஆயிரம் வழங்குவது என்பதை இறுதி செய்ய அதிகாரிகள் உடன் ஆலோசனை.

*ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்கான நிபந்தனைகள் வெளியீடு – 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.

*நியாய விலைக் கடை அட்டை எந்த கடையில் உள்ளதோ, அந்த கடையில் விண்ணப்பிக்க வேண்டும் – பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை கிடைக்காது

*ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது – சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

*கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..தூக்கமின்மை மற்றும் மன அழுத்தப் பிரச்சினைக் காரணமாக விபரீத முடிவை எடுத்துவிட்டதாக காவல் துறை விளக்கம்.

*டி.ஐ.ஜி.விஜயகுமர் உடலை சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்கு..டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் அஞ்சலி.

*திறமையான காவல்துறை அதிகாரியை இழந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்… விஜயகுமார் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆறுதல்.

*டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.. சிறப்புக் குழு அமைத்து விசாரிக்குமாறு அண்ணாமலை கோரிக்கை.

*காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.. கர்நாடக பட்ஜெட் உரையில் முதலமைச்சர் சித்தராமய்யா அறிவிப்பு.

*சென்னை நந்தம்பாக்கத்தில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி – மாணவி மினுவை கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஒடிய நவீன் என்ற இளைஞர் கைது.

*இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த 162 ஆண்டுகளில் அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ராகுல் காந்திக்கு தான் – ஒரு நாள் நீதி கிடைக்கும் என்று ப.சிதம்பரம் கருத்து.

*முன்னாள் அமைச்சர் வீரமணி ஊழல் தொடர்பான கோப்புகளை ஆளுநர் பெற்றுக்கொண்டதற்கான கடிதத்தை வெளியிட்டது தமிழக அரசு.. வீரமணி தொடர்பான கோப்புகள் தமக்கு வரவில்லை எனறு ஆர்.என்.ரவி கூறியிருந்ததற்கு பதிலடி.

*சத்தீஸ்கர் மாநிலத்தில் எட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கையே ஊழல் செய்வதுதான் என்று குற்றச்சாட்டு.

*மோசமான வானிலை காரணமாக அமர்நாத் பயணம் தற்காலிக நிறத்தம்.. பக்தர்கள் ஆங்காங்கு முகாம்களில் தங்க வைப்பு.

*ஐதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து..ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் மின் கசிவு காரணமாக எரிந்ததால் பதற்றம்.

*எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு தொடர்பாக மீண்டும் விசாரணை..சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்.

*சாதியின் பெயரால் எந்த மனிதரையும் தள்ளிவைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம்.. சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 34 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு.

*செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை ஜுலை 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் 3- வது நீதிபதி கார்த்திகேயன்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஐராக அவகாசம் தருமாறு செந்தில் பாலாஜி மனைவி வைத்த கோரிக்கை ஏற்பு.

*சென்னையில் அசோக் நகரில் காவல் துறை வாகனம் தாறுமாறாக ஓடி விபத்து.. பத்து இரு சக்கர வாகனங்களை இடித்துத் தள்ளியதால் பரபரப்பு.

*290 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்து. . ரயில்வே பணியாளர்கள் 3 பேரை கைது செய்தது சிபிஜ.

*பொது சிவில் சட்டம் தேவையில்லை என்ற அதிமுக நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை..முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து.

*செந்தில் பாலாஜி பதவி பறிப்பை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கு எதிரான பொது நல வழக்கு.. ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என்று கேட்டு வழக்கை தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்.

*பேஸ்புக் நிறுவனம் தொடங்கிய திரெட்சில் ஒரே நாளில் ஐந்து கோடி பேர் இணைந்ததனர்.. தங்கள் தொழில் நுட்பத்தை களவாடிவிட்டதாக டுவிட்டர் நிறுவனம் புகார்.

*டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு ஆளானதன் எதிரொலி.. ஆழ்கடல் சுற்றுலாவை நிறுத்தி வைப்பதாக ஓசோன் கேட் நிறுவனம் அறிவிப்பு.

*ரஷ்யாவும் உக்ரைனும் ஓயாத சண்டைக்கும் நடுவே கைதிகள் பரிமாற்றம்- தலா 45 கைதிகளை இரு நாடுகளும் விடுவிப்பு.

*நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை தொடருகிறது.. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவு

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *