*கேப்டன் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை அடக்கம் … கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புரட்சிக் கலைஞர் உடலுக்கு பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி. *இரு வாரங்கள் முன்பு குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவனையில் மீண்டும அனுமதிக்கப்ட்டிருந்தார்.. சிகிக்சை பலனின்றி காலையில் உயிர்பிரிந்தது. *கடந்த 1951 ஆண்டு மதுரையில் பிறந்த விஜயகாந்த்Continue Reading

செப்டம்பர்,19- நடிகைகள் 40 வயதை தாண்டி விட்டால் அக்கா, அம்மாகேரக்டர்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் திரிஷாவுக்குஅதிர்ஷ்டம். நாற்பது வயதை அவர் கடந்துள்ள நிலையில்கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகிறது. சாதாரண படங்கள் இல்லை.பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்கள் படங்கள்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என தமிழில் அனைத்து பெரிய ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை திரிஷா மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் வந்த படங்கள்Continue Reading

செப்டம்பர், 16- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு துண்டுகளாக உடைந்திருந்தாலும் ஈபிஎஸ் தலைமையிலான அணி வலிமையாக உள்ளது. 95 சதவீத மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார். தொகுதி பங்கீடு குறித்து பாஜக மேலிடத்துடன் பேச்சு நடந்த ஈபிஎஸ் அண்மையில் டெல்லி சென்றார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அப்போது அதிமுக நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை. ஈபிஎஸ்சின் உதவியாளர்,Continue Reading

செப்டம்பர்,16- தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவை அடுத்து,ஏராளமான இயக்குநர்கள் ஷங்கரின் பட்டறையில் இருந்து வெளிப்பட்டவர்கள் தான். பாக்யராஜ், மணிவண்ணன்,மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன் வண்ணன், சீமான் உள்ளிடோர், பாரதிராஜாவின் வார்ப்புகள். வெங்கடேஷ், மாதேஷ், சிம்பு தேவன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஹோசிமின்,அடலீ ஆகியோர் ஷங்கரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள். எனினும் ஷங்கரை போன்று வணிக ரீதியாக, தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்தவர், அட்லீ மட்டுமே. ஷங்கரிடம் எந்திரன்,நண்பன் ஆகிய படங்களில் பணியாற்றிய அட்லீ, ராஜாராணிContinue Reading

செப்படம்பர்,15- சினிமா நடிகை விஜயலட்சுமியால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூக்கம் தொலைத்து நிற்கிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரே இதற்கு காரணம். ’’மதுரையில் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார்- கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்தோம்-7 முறை கருத்தரித்தேன் -ஆனால் என் அனுமதி இல்லாமல் மாத்திரை கொடுத்து சீமான் கருக்கலைப்பு செய்தார்-என்னை ஏமாற்றிய சீமான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எபுகாரில்Continue Reading

செப்டம்பர்,15- கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக.,பல இலவசங்களை அறிவித்தது .பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதானமானது. அதனை நிறைவேற்றும் பணிகள் சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றது.அந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டது. உரிமை தொகை வாங்குவதற்கு ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்., தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம்Continue Reading

செப்டம்பர்,15- தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மிகவும் வலிமையானது. தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் நடிகர்களை, திரை உலகத்தில் இருந்தே அவர்களால் விரட்ட முடியும். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் ஹீரோ வடிவேலு, அந்த படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், இயக்குநர் சிம்புதேவனுக்கும் ஏகப்பட்ட இம்சைகளை கொடுத்தார்.படப்பிடிப்புக்கு வராமல் முரண்டு செய்தார்.இதனால் ஷங்கர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’கார்டுContinue Reading

செப்டம்பர்,14- கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கும், ரோட்டில் போய்க்கொண்டிருந்த பொது மக்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வெறும் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்க முடியாது என்பதை ஏற்பாட்டாளர்கள் இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. கச்சேரி நடந்த அரங்கில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அமரமுடியும். ஆனால் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். அளவுக்கு அதிகமானContinue Reading

செப்டம்பர்,14- ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. அந்த கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் கைது செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரிContinue Reading

செப்டம்பர்,13- அண்மையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 4 தொகுதிகளில் வென்றது.பாஜக 4 இடங்களை பிடித்தது. மே.வங்க முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜியும், உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அகிலேஷ் யாதவும், இந்த தேர்தலில் பாஜகவுக்கு மரண பயத்தை காட்டியுள்ளனர். அவர்களின் கட்சிகள்,தங்கள் மாநிலங்களில் பாஜகவை வேரறுத்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும், வலுவாக இருந்து வந்த பாஜக இடைத்தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளது.bContinue Reading