*பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கணினிப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் உதவிகள். மகப்பேறுக்கு பிறகு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் என ஏழு பிரிவுகள் குறித்து அந்தந்த துறைகளால் வெளியிடப்பட்டு உள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் … கடந்த 2022-2023 இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 16.3 சதவிகிதம் ஆகும்.
*மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழ்நாடு எதிலும் முதலிடம் வகிப்பதாக பெருமிதம் … இந்தியாவின் எழுச்சிக்கு திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்றும் கருத்து.
*திமுக அரசு திராவிடல் மாடல் அரசு அல்ல, 52 குழுக்கள் அமைத்து உள்ளதால் குழு அரசு என்று எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை தொகுதி பரப்புரைக் கூட்டத்தில் விமர்சனம் … திமுகவில் வாரிசு அரசியல் உள்ளதால் தொண்டர்கள் உயர் பதவிக்கு வரமுடியாது என்றும் கருத்து.
*மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிவகங்கை தொகுதி பாஜக கூட்டணி வேட்பார் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை திறந்த வேனில் நடத்தவிருந்த பரப்புரை ரத்து … வேட்பாளர் தேவநாதன் மீது ரூ 525 கோடி நிதி நிறுவன மோசடிப் புகார் எழுந்து உ ள்ளதால் அமித்ஷா தமது காரைக்குடி நிகழச்சியை ரத்து செய்து விட்டதாக கருத்து.
*நீலகிரி மாவட்டம் கூடலூரில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில் மொத்தம் ரூ 3 கோடி பறிமுதல் … வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வருமான வரித்துறை நடவடிக்கை
*திருநெல்வேலியில் நாளை பிற்பகல் தென் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார் ராகுல் காந்தி .. நெல்லையை அடுத்து கோவைக்கு வரும் ராகுல் காந்தி ஒரே மேடையில் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்கிறார்.
*பரப்புரைக்காக 15-ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு திரட்ட முடிவு
*அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை… கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதி வேட்பாளர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரிக்க நடவடிக்கை.
*சென்னை தியாகராயர் நகரில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டியபோது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக பறக்கும் படை அதிகாரிகள் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு … காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதாக புகார்.
*கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அவர்களின் ஊழலை சுமந்ததால்தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது என்று அண்ணாமலை பேட்டி.. அதனால் தான் இப்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கவில்லை என்றும் புது விளக்கம்.
*உபரிப் பணியாளர்கள் எனக் கூறி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது… அடுத்த 4 வாரங்களில் பழைய பதவிகளில் அவர்களை நியமிக்கவும், பழைய ஊதியத்தை வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் சந்திக்கும் சிக்கிம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகம் தொடங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு… பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்றும் பாஜக வாக்குறுதி.
*நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றிப் பெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேட்டி .. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் கருத்து
*டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.சி. கவிதாவை சிபியையும் கைது செய்தது … டெல்லி மாநிலத்திற்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு விரும்பிய தனியார் நிறுவனத்திற்கு உதவி செய்தார் என்பது கவிதா மீதான குற்றச்சாட்டு ஆகும்.
*ரமலான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை … புகழ் பெற்ற டெல்லி ஜும்மா மஸ்ஜித் யில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை.
*வரும் 2027 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள 14- வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தென்னாப்பிரிக்காவில் எட்டு மைதானங்கள் தேர்வு .. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிப்பு.
*வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள கோட் என்ற படம் செப்டம்பர் 5 -ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு .. கோட் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மோகன், லைலா உள்ளிட்டோரும் நடித்து உள்னனர்.
*தமிழ்நாட்டில் இன்றும் அதிகபட்ச வெப்பம் திருப்பத்தூரில் தான் பதிவு … நேற்று போன்று இன்றும் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி.
*மாநிலத்தில் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தகவல் … ஈரோட்டில் 104.சேலத்தில் 103, நாமக்கல்லில் 102 டிகிரி பாரன் ஹீட்வெப்பம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447