தலைப்புச் செய்திகள் (12-04- 2024)

*கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ராகுல் காந்தி பங்கேற்பு.. கோவை ,நீலகிரி,பொள்ளாச்சி,திருப்பூர், கரூர் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை..

*நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் நாயகன் என்று கோவை கூட்டத்தில் ஸ்டாலின் புகழாரம் .. தனியார் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாகவும் புகார்,

*இந்தியாவில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி அரசு என்று கோவை பொதுக்கூடத்தில் ராகுல் காந்தி பேச்சு .. அதானி பற்றிநாடாளுமன்றத்தில் பேசியதால் தமது எம்.பி, பதவி பறிக்கப்பட்டதாகவும் புகார்.

*பெரியார், அண்ணா, காமராஜர்,கலைஞர் ஆகியேர் தமிழ் நாட்டு மக்களுக்காகா பேசியது உலகம் முழுவதும் எதிரொலித்தது … தமிழ் நாட்டிற்க்கு வரும் போதெல்லாம் தோசை பிடிக்கும் என்று சொல்லும் மோடி மற்ற மாநிலங்களளுக்குச் செல்லும் போது வேறு விதமான பேசுவதாகவும் கருத்து

*இந்தியாவில் ல் இரண்டு சித்தாந்தங்கள் இடையோ போர் நடைபெறுகிறது, ஒரு பக்கம் பெரியார் போதித்த சுமூக நீதி, சமத்துவம்,விடுதலை இருக்கிறது- மற்றொரு பக்கம் மோடி போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும் துவேசமும் இருக்கிறது …. நெல்லையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ., ராகுல் காந்தி பேச்சு.

*நீலகிரி தொகுதி தேர்தல் உதவி செலவின பார்வையாளர் சரவணன், தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகுவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராஜாவின் செல்வுகளை குறைத்துக் காட்டும்படி மாவட்ட ஆட்சியர் அருணா அழுத்தம் கொடுப்பதாக புகார்.. அதிகாரியி்ன் புகாரை அடுத்த மாவட்ட ஆட்சியர் மாற்றப்படலாம் என்று தகவல்.

*புகழ்பெற்ற லோக்நிதி ஆய்வு அமைப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிலவும் முக்கிய பிரச்சினை குறித்து நடத்திய ஆய்வில் பங்கேற்றவா்களில் 55 சதவிகிதம் பேர் கடந்த ஐந்து ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என்றும் 27 சதவிதிம் பேர் வேலையின்மை என்றும் 23 சதவிகிதம் பேர் விலை வாசி உயர்வு என்றும் கருத்து … ஆய்வறிக்கை தகவலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள மு.க. ஸ்டாலின், பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்று கருத்து,

*ஒரு கிலே அரிசி விலை கடந்த ஆறு மாதங்களில் ரூ 15 வரை உயர்ந்துவிட்டதாக நாமக்கல் பரப்புரைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கருத்து … அதிமுக ஆட்சிக் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும் புகார்.

*காரைக்குடியில் திறந்த வாகன பிரச்சாரத்தை ரத்து செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு .. சாலையில் திரண்டிருந்தவர்களைப் பார்த்து தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி வேண்டுகோள்.

*குஜராத்,உத்திர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கிய பாஜக அரசால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடியாதது ஏன் என்று மதுரையில் நடத்த பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி… பிற மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை நிறைவு செய்துவிட்டு தமிழ்நாட்டை பாஜக வஞ்சிப்பதாகவும் புகார்.

*கோயம்புத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தமது தொகுதி வாக்காளர்களுக்கு 100 வாக்குறுதிகளைள் கொடுத்து தேர்தல் அறிக்கை வெளியீடு … கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்த பணிகள் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிப்பு.

*தமிழ் நாட்டின் தேர்தல் பாதுாப்புக்காக வெளி மாநிலங்களில் இருந்து மேலும் பத்தாயிரம் போலீஸ் வருகை ….. பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

*மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தை இன்னும் பிடிபடாத நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு… சிறுத்தை தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை.

*கேரளாவில் பாலக்காடு மாவடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை ரயில் எஞ்சின் மோதி படுகாயம், கால் நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை … ரயில் என்ஜின் டிரைவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை.

*பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முசாவிர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேர் மேற்கு வங்கத்தில் கைது குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்த என்.ஐ.ஏ.பெங்களூரு கொண்டுவருகிறது.

*இந்தியா கூட்டணி தலைவர்கள் நவராத்திரி விரத காலத்தில் அசைவ உணவுகள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வதாக காஷ்மீரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மேடி புகார் .. .. இந்தியா கூட்டணி தலைவர்கள் மொகலாய மன்னர்களின் மன நிலையுடன் இருப்பதாகவும் குற்றச்சாட்டு.

*இஸ்ரேல்- ஈரான் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் …அந்த இரண்டு நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை வேண்டுகோள்.

*இந்தியாவை விமர்சித்து மாலத்தீவுகள் நாட்டு அமைச்சர்கள் பேசியதை தொடர்ந்து அந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது … இந்தியாவின் முக்கிய நகரங்களில் மாலத்தீவுக்கு வாருங்கள் என்று பிரச்சாரம் செய்திட திட்டம்.

*மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. ஏப்ரல் 9-ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 21-ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏ3 அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு.

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805க்கு விற்பனை… சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440க்கு விற்பனையானதால் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது.

*அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா என 90 படங்களில் நடித்துள்ள நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் காலமானார்… அதிமுகவிற்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக வெளியூரில் பிரசாரம் மேற்கொண்டு வந்த அருள்மணி, சென்னை திரும்பிய நிலையில் திடீர் மாரடைப்பால் நேற்று உயிர் பிரிந்தது.

*தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி குமரி, நெல்லை, என 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு .. கடந்த 2 4 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில்.12 சென்டிமீட்டர் மழை பதிவு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *