தலைப்புச் செய்திகள் (02-01-2023)

*திருச்சி விமான நிலையத்தில் ரூ1,100 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி… தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானத் துறை, ரயிலேவே, நெடுஞ்சாலை, கப்பல் மற்றும் உயர் கல்விதுறை ஆகியவற்றில் மொத்தம் ரூ 20,140 கோடி மதிப்பிலனா திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல்.

*புதிய திட்டங்களால் தமிழ்நாட்ல் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் பேச்சு .. தமிழ்நாட்டில் மழை வெள்ளதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு துணையாக இருந்து வருவதாகவும் கருத்து.

*விஜயகாந்தின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு .. நிஜத்திலும் கேப்டனாகவும் வாழ்ந்தவர் என்று திருச்சி நிகழ்ச்சியில் மோடி புகழாரம்.

*சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் வாழ்வதாரம் கடுமையாக பாதிப்பு … தமி்ழ்நாட்டு வெள்ளப் பாதிப்புகளை இயற்கை பேரிடர்கள் என்று அறிவித்து போதிய நிவாரண நிதியை வழங்குமாறு திருச்சி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

*கல்வியில் சிறந்த எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள்தான் முதலிடத்தில் இருப்பதற்கு100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதைதான் காரணம் …திரவிட மாடல் அரசு இன்னார் தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளும் வழங்கியதாகவும் திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழக பட்டமளிப்பு விழாவில முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

*திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.. மாணவர்கள் கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்த விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.

*சென்னை,மதுரை, கோவை.திருச்சி. தூத்துக்குடி மற்றும் வேலூர் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கலலை விரைந்து முடிக்க வேண்டும் .. சென்னையில் இருந்து பினாங்கு , டோக்கியோ நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்குவது அவசியம் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் விளக்கம்.

*மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை 100% எண்ணக்கோரி வழக்கு… இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

*சொத்துவரி பெயர் மாற்றக் கட்டணத்தை ரூ 20 ஆயிரமாக உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும் .. சான்றிதழ்கள், பத்திரங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்க வகை செய்யுமாறும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் … ஜாதி பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கும் திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மட்டும் மறுப்பதாக சிதம்பரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

*கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள குறைகள் அனைத்தும் ஓரிரு நாளில் சரி செய்யப்படும் என்று அமைச்சா சேகர் பாபு உறுதி .. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கு ரூ 20 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும் பேட்டி.

*சென்னையில் இருந்துது தென் மாட்டங்களுக்கு தினசரிஇயக்கப்படும் 850 பேருந்துகளை நிறுத்துவதற்கும் பழுது பார்ப்பதற்கும் உரிய வசதிகளை கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்து தருமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை … வேலைகள் முழுமை அடையும் வரை கோயப்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தல்.

*தமிழ் நாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை … சென்னை, மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் 30 இடங்கள் சோதனைக்கு ஆளானது.

*சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் ஒன்பது கோடி 11 லட்சம் பேர் பயணம் … நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ நிறுவனம் அறிக்கை.

*திண்டுக்கல தனியார் நர்சிங் கல்லூரி தாளாளரும் அமமுக பிரமுகருமான ஜோதி முருகன் என்பவருக்கு பாலியல் புகார் தொடர்பான வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை … மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றம் தீாப்பு.

*வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது … சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல்.

*சாலை விபத்தால் மரணம் ஏற்பட்டால் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்… மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெறும் வேலை நிறுத்தத்தால் சரக்குப் போக்குவரத்து பாதிப்பு.

*லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மராட்டியத்தில் பெட்ரோல் டீசலுக்கு தடடுப்பாடு .. பங்குகள் முன்பு வாகன ஓட்டிகள் காத்திரு்ப்பு.

*சபரிமலைக்கு வரும் பக்தர்கள் உடனடியாக ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் முறை ஜனவரி 10 முதல் நிறுத்தப்படுவதாக திருவாங்கூர் தேவம்சம் போர்டு முடிவு … மகர விளக்கு ஜோதியின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை.

*மணிப்பூர் மாநிலத்தில் கிராமவாசிகள் நான்கு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடு்க்க வேண்டும் .. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கோரிக்கை.

*நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களை வெல்வதே இலக்கு .. டெல்லியில் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிள் கூட்டத்தில புதிய முழக்கம் உருவானது.

*இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானியை இரண்டாம் இடத்துக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி .. தமிழ்நாட்டை சேர்ந்தவரும் எச்.சி.எல். நிறுவனத்தின் நிறுவனருமான ஷிவ் நாடாருக்கு மூன்றாது இடம்.

*ஜப்பான் நாட்டின் டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழப்பு .. பயணிகள் விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக மீட்பு.

*அமெரிக்காவும் தென்கொரியாவும் வடகொரியவைத் தூண்டினால், அவர்களை “முற்றிலும் அழித்தொழிக்க” வேண்டும் என தனது இராணுவத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி… புத்தாண்டு உரையில் புதிய ஆயுதக் கிடங்குகளை உருவாக்கவும் பேருக்குத் தயாராக இருக்கும்படியும் ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் தமது புத்தாண்டு உரையில் உத்தரவு.

*ஜப்பானில் புத்தாண்டு நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக உயர்வு … ஒரே நாளில் அடுத்தடுத்து 155 முறை நில நடுக்கம் ஏற்பட்டதால் பிறப்பிக்கப்பட்ட சுனாமி எச்சரிகை இன்று வாபஸ்.

*சண்டைக் கோழி 2 படத்தின் உரிமையை பெற்ற லைகா நிறுவனம்,அதற்கான ஜி.எஸ்.டி. தொகை மற்றும் வட்டியையும் சேர்த்து ரூ.5,24 கோடியை தரவில்லை என்று நடிகர் விஷால் வழக்கு ..லைகா நிறுவனம் ஜனவரி 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *