தலைப்புச் செய்திகள் (01-01-2023)

*ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் புள்ளியில் 7.6 ஆக பதிவு … சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்த நாட்டு அரசு அறிவுறுத்தல்.

*முதல் சுனாமி அலை ஒரு மீட்டர் உயரத்திற்கு இருந்ததாக தேசிய ஒளிபரப்பு அமைச்சகம் தகவல் … கடலில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்திற்கு அலைகள் கிளம்பக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை.

*இந்திய நேரப்படி மதியம் 12.40 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அடுத்தடுத்து 30 முறை உருவானது.. கட்டிடங்கள் பலத்த சேதம், சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால் பள்ளம்.

*ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் .. உதவி எண்களையும் அறிவித்தது டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம்.

*புத்தாண்டின் முதல் நாளில் பி.எஸ்.எல்.வி- சி -58 ராக்கெட் 11 செயற்கை கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது .. பூமியிலிருந்து 650 கி.மீ புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின் பிரிந்த செயற்கைக் கோள்கள் பணியை தொடங்கின.

*திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை நாளை திறந்து வைக்கிறார் மோடி … திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார் பிரதமர்.

*திருச்சியில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பு .. நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு.

*திருச்சியில் அரியமங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பேர் இறந்த பரிதாபம்.

*தமிழகத்தில் IPS அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு.. IPS அதிகாரிகளான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம் மயில்வாகனன் ஆகியோர் டி.ஜ.ஜி. ஆனார்கள்.

*புதிய வண்ணத்தில் கூடுதல் வசதிகள் உடன் கூடிய புதிய பாதுகாப்பு வாகனங்களுடன் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பயணம்… மற்ற மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு வாகனங்களை போலவே, தமிழகத்திலும் பாதுகாப்பு வாகனங்கள் மாற்றம்.

*திண்டிவனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்தின் டீசல் டேங்கர் உடைந்து விபத்து … போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் ஐந்து கிலோமீட்டருக்கு அணி வகுத்து நின்றன.

*பொங்கல் நெருங்குவதால் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன .. பாலமேட்டில் ஜனவரி 16- ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக் கட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வெளியிட்டது விழாக்குழு.

*ரூ.1,929க்கு விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,924.50க்கு விற்பனை… டிச.22-ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ரூ. 4.50 குறைந்தது.

*நாடு முழுவதும் டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் .. அதிக பட்சமாக மராட்டிய மாநிலத்தில 26,814 கோடி, தமிழ் நாட்டில் ரூ 9,888 கோடி வசூல்.

*ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை 7- வது முறை சம்மன் அனுப்பி உள்ளதன் எதிரொலி .. ஒரு வேளை கைது செய்யப்பட்டால் முதலமைச்சர் பதவியை மனைவி கல்பானாவிடம் ஒப்படைக்க சோரன் முடிவு செய்திருப்பதாக தகவல்.

*ஒருவொருக்கொருவர் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடை செய்யும் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா- பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்களின் பட்டியல் இன்று பரிமாற்றம் .. கடந்த1992- ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி தூதரகங்கள் வழியாக இந்த பரிமாற்றங்கள் நடைபெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்.

*பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் இரண்டு தொகுதிகளில் தாக்கல் செய்த மனுக்களையும் ஏற்றது அந்த நாட்டு தேர்தல் ஆணையம் … ஊழல் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஷெரீப்பின் மனுக்களை ஏற்கக் கூடாது என்ற கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் நிராகரிப்பு.

*சிரியா நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் எட்டு பேர் உயரிழப்பு … சிரியாவில் ஆயுதக் குழுக்கள் தங்கள் நாட்டின் மீது நடத்தும் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி.

*உலகம் முழுவதும் விடிய ,விடிய புத்தாண்டு கொண்டாட்டம் , கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் பல ஆயிரம் வழிபாடு.

*சிறப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் எதுவுமில்லை .. ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாரட்டு.

*வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் G O A T என்ற படத்தின் இரண்டாவது போஸ்டர் இணையத்தில் வெளியானது .. நேற்று வெளியான முதல் போஸ்டரை தொடர்ந்து இன்று மாலை வெளியான இரண்டாவத போஸ்டரும் வைரல் ஆனது.

*நடிகர் கமலஹாசன் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடிய படம் வலைதளங்களில் வைரல் .. கமலஹாசன், சுருதிஹாசன், அவரது காதலர் சந்தனு, இயக்குநர் மணிரத்தினம், சுஹாசினி படத்தில் உள்ளனர்.

*நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து.. சென்னை போயஸ் தோட்ட இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்கள் முன் தோன்றி கையசைப்பு.

*சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு…. சிட்னியில் நாளை மறுதினம் தொடங்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் வார்னர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *