தலைப்புச் செய்திகள் (13-02-2024)

*டெல்லி நோக்கி விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டம் காரணமாக தலைநகரத்தின் எல்லையில் பலத்த கட்டுப்பாடு. … போராட்டத்தை கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளை மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு.

*கண்ணீர் புகைக் குண்டுகளை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறியதால் பதற்றம்… தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை கலைக்க போலீசர் முயற்சி

*டெல்லியில் பகல் முழுவதும் பல மடங்கு கூடுதல் பாதுகாப்பு … முக்கியமான பல மெட்ரோ ரயில் நிலையங்களில் வாயில்கள் மூடல்.

*விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாய அமைப்புகளின் கோரிக்கை … குறைந்த பட்ச விலை நிர்ணயம் உடனடி சாத்தியம் இல்லை என்று அரசு தரப்பில் பதில்.

*விவசாயிகளை சிறைவைப்பதற்கு பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கை டெல்லி அரசால் நிராகரிப்பு. விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியல் சாசன உரிமை என்று டெல்லி அரசு பதில்.

*அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்… கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

*கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி புகார் … பிரச்சினைகளை சரி செய்த பிறகே திறந்திருக்க வேண்டும் என்றும் கருத்து.

*சிறிய பிரச்சினைகள் மட்டுமில்லை பெரிய பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதில்… பிரச்சினைகள் இருந்தால் சொல்லுங்கள் நேரில் அழைத்து செல்கிறோம் என்றும் அழைப்பு.

*கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும் என்று போக்குவரத்துத் துறை அறிக்கை … ஆம்னி பேருந்துகள் போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கம்.

*தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி… தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார்.

*ஜே.இ.இ முதன்மை தேர்வில் தமிழகத்தை சேர்ந்த முகுந்த் பிரதீஷ் என்கிற மாணவர், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை … பாளையங்கோட்டை தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், 300- க்கு 300 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்.

*மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்… 11 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் முதலிடம் பிடித்து உள்ளதாகவும் கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு.

*பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் ….. இன்று தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய நிலையில் 22- ஆம் தேதி காத்திருப்பு போராட்டம், 27- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் முடிவு.

*தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் … மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிப்பு.

*சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் இமாச்சல பிரதேச்தில் இருந்து சென்னை வந்தது… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சைதை துரைசாமிக்கு ஆறுதல்.

*சைதாப்பேட்டையில் மனித நேய அறக்கட்டளைக்கு கொண்டு வரப்பட்ட வெற்றி உடலுக்கு பல ஆயிரம் பேர் அஞ்சலி… 45 வயதான வெற்றி கடந்த 4 ஆம் தேதி இமாச்சலில் நிகழ்ந்த கார் விபத்தில் மரணம்.

*நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் … இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

*காக்கா முட்டை இயக்குநரின் உசிலம்பட்டி வீட்டில் திருடிய பதக்கத்தை திரும்ப வைத்த திருடர்கள் … அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு- என்றும் கடிதம்..

*ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றடைந்த பிரதமர் மோடி, அபுதாபியில் அதிபர் ஷேக் முகமது பின் ஷையத்துடன் சந்திப்பு … அபுதாபியில் இந்து கோயிலளையும் திறந்து வைக்கிறார் மோடி.

*பாகிஸ்தானில் நவாஷ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி அமைக்க பிலவால் பூட்டோ தலைமையிலான மக்கள் ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு … ஆனால் அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று முடிவு.

*கடந்த ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் வாகனங்கள் விற்பனை அதிகரித்து இருந்ததாக ஆட்டோமபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு … இரு சக்கர வாகனங்களின் விற்னை 15 சதவிகிதமும் பயணிகள் வாகன விற்பனை கூடி இருந்ததாகவும் விளக்கம்.

*சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ரூ 80 முதல் 100 என்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ரூ 120 முதல் 150 வரை என்றும் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு திரை அரங்கு உரிமையாளர்ளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை … சிறிய பட்ஜெட் படங்களை திரையரங்கத்திற்கு வந்து மக்கள் பாப்பதற்காகவே இந்த கோரிக்கை என்று விளக்கம்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *