*தாம்பரம் ரயில் நிலையத்தில், ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட சுமார் ₹3.99 கோடி ரொக்கத் தொகை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்…. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தகவல்…, பணத்தைக் கொண்டு ச் சென்ற 3 பேரும் முன்பின் முரணாக பதிலளித்ததால் கைது.
*சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை சோதனை.. உரிய ஆவணங்களின்றி ரூ.3.99 கோடியை நெல்லை விரைவு ரயிலில் கொண்டுவந்த ரூ.3.99 கோடி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முருகனிடம் விசாரணை.
*தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறையை E-Filing ஆக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 19ம் தேதி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவிப்பு. புதிய முறையை அமுல்படுத்தியதால், வழக்கறிஞர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்று புகார்.
*“ரூ.4 கோடிக்கும் தமக்கும் சம்பந்தமில்லை .. நெருக்கடி கொடுக்க சிலர் தம்மை டார்கெட் செய்கின்றனர் என்று நயினார் நாகேந்திரன் விளகக்ம்.. மக்களை திசைதிருப்ப திமுகவினர் செய்த வேலை என்றும் புகார்.
*நெல்லை விரைவு ரயிலில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறி்த்து தகவல் தரப்பட்டு உள்ளதால் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என்று தலைமைதேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் …தேர்தல் நேரத்தில் பத்து லட்சத்திற்கும் மேல் மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் விளக்கம்.
*வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பல கோடி ரூபாய் பாஜகாவால் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார்… நயினார் நாகேந்திரன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
*திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனப் பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு .. திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகனப் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்ததற்கு எதிரான மனுவை விசாரித்த நீதிமன்றம், கண்ணப்பா ஹோட்டல் முதல் வி.எஸ்.ஐ. மருத்துவமனை வரை நடத்திக்கொள்ள அனுமதி.
*சென்னையைப் போன்று கோவையில் சர்வதேச தரத்துடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் … மு.க.ஸ்டாலின் வாக்குறுதி.
*மத்தியில் தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் மாறி,மாறி ஆட்சிக்கு வரும்போது மாநிலத் தேவைகளை புறக்கணிக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் பிரச்சாரம் .. கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதை ஸ்டாலின் சொல்ல மறுப்பதாகவும் புகார்.
*புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்படுத்தவில்லை என்று புதுச்சேரியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு … மாநிலங்களை நகராட்சிகள் போலவும் யூனியன் பிரதேசங்களை பேரூராட்சிகள் போலவும் பாஜக அரசு நடத்துவதாகவும் புகார்.
*தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர் , நிர்மலா சீதாராமன் இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தல் ..- இரண்டு பேரும் பிரதமர் மோடிக்கும் பின்னால் ஒளிந்துகொாண்டு கச்சத்தீவு பிரச்சினையை எழுப்புவதாகவும் பேட்டி.
*தேசியக் கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரே நிறத்திற்கு மாற்றப்படலாம் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருப்பெரும் புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரச்சாரம் … வாக்கு எந்திரத்தில் பல்வேறு சின்னங்களும் அகற்றப்பட்டு ஒரே சின்னம் மட்டுமே இருக்கும் நிலையும் ஏற்பபடலாம் என்று எச்சரிக்கை.
*சென்னை தியாகராயர் நகரில் நாளை மறுதினம் மாலை பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிப்பு … ட்ரோன்களை பறக்க விடுவதற்கு தடை விதித்து உத்தரவு.
*விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல் விழுப்புரம் அடுத்துள்ள சொந்த ஊரான அத்தியூரில் அரசு மரியாதையுடன் தகனம் … முன்னதாக நேற்றிரவு புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.
*தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறையை E-Filing ஆக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 19ம் தேதி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவிப்பு. புதிய முறையை அமுல்படுத்தியதால், வழக்கறிஞர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்று புகார்.
*ஈக்வாடர் நாட்டின் துணை பிரதமர் ஜார்ஜ் கிளாஸ் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக அங்குள்ள மெக்சிகோ நாட்டின் தூதரகத்தல் அரசியல் தஞ்சம் கேட்டு அடையாளம் .
*சிரியாவில் உள்ள இரான் நாட்டின் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டு வீசி இரானியர்களை கொன்றதால் அரபு நாடுகள் வட்டாரத்தில் புதிய பதற்றம் … இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இருப்பதால் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவுக்கு இரான் கடிதம்.
*புஷ்பா 2 படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான நாளை வெளியாகிறது ..புஸ்பா 1 போன்று இரண்டாவது படமும் பெரும் வெற்றிப் பெரும் என்று படக்குழு நம்பிக்கை
*தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு .. ஈரோட்டில் 107.6, சேலம் மற்றும் திருப்பத்தூரில் 106.8, வேலூரில் 106.3 டிகிரி வெப்பம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447