நடிகர் விஜய் தமது தந்தையுடன் பேசிய அரசியல் என்ன ?

செப்டம்பர்,16-

நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் நடிகராக விஜய்இன்றைக்கு உச்சத்தில் இருக்கிறார்.அடுத்து அரசியலில் இறங்க காய் நகர்த்தி வருகிறார்.

ஆரம்ப நாட்களில் விஜய்,அப்பா பிள்ளையாகவே இருந்தார். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான், விஜய்காக கதை கேட்பார். அவருக்கு கதை பிடித்திருந்தால் விஜய் நடிப்பார்.விஜய்க்கான சம்பளத்தையும் கூட எஸ்.ஏ.சி.தான் தீர்மானிப்பார்.

ஆனால் நாளாவட்டத்தில் விஜய் தன்னை மாற்றிக்கொண்டார். தானே நேரடியாக கதை கேட்க தொடங்கினார். அவரே, தனக்கான சம்பளத்தை பேசினார்.படங்களின் தொடர் வெற்றி, பெரிய சம்பளம், ரசிகர்கள் பட்டாளம் போன்ற உயரங்கள், விஜயை முழுதாக மாற்றின.பனையூரில் தனி வீடு கட்டி குடியேறிய பின், தந்தையிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார், விஜய்.

விஜய் பெயரை பயன்படுத்தி, எஸ்.ஏ.சி.அரசியல் நகர்வுகளை. ஆரம்பித்ததும், தந்தை -மகன் உறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.,ஆரம்பத்தில் விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ.புஸ்ஸி ஆனந்த் கொண்டு வரப்பட்டார். ஆரம்பகாலத்தில் தனக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்த பி.டி.செல்வக்குமாரை தூக்கி விட்டு, அந்த இடத்தில் ரியாஸ் அகமதுவை அமர வைத்தார்.

இப்போது விஜய், தனது சினிமா தொடர்பான வேலைகளுக்கு ரியாஸ் அகமதுவையும்,அரசியல் பயணத்துக்கான பாதையை தயார் படுத்தும் பணிகளுக்கு புஸ்ஸி ஆனந்தையும் பயன் படுத்திகொள்கிறார். இந்நிலையில் விஜய், தனது தந்தை ஏஸ்.ஏ.சி.யை திடீரென சந்தித்து பேசியது, பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகிறது.. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு மூன்று வேடங்கள். ஒரு கதாபாத்திரத்தில் அவர் மிகவும் இளமையாக தோன்ற உள்ளார்.

இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்காசென்றிருந்தனர். கலிபோர்னியாவில் உள்ள சிஜி நிறுவனம் ஒன்றில், ’3டி விஎஃப்எக்ஸ் ‘டெக்னாலஜியில் விஜய் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அந்தப் பணி முடிந்து அவர் சென்னை திரும்பினார்.

சில நாட்களுக்கு முன்பு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடல்நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரை விஜய் நேரில் சந்தித்தார். உடல்நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அரசியல் கட்சி தொடங்க உள்ள விஜய், இது குறித்து எஸ்.ஏ.சி.யிடம் விவாதித்தாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.விஜய் வட்டாரத்தில் இது குறித்து பேசினோம். ’ஆபரேஷன் செய்துள்ள தந்தையை விஜய்சார் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.அப்போது அரசியல் குறித்து பேசும் நிலையில் எஸ்.ஏ.சி. சாரும் இல்லை. விஜய் சாரும் இல்லை. புஸ்ஸி ஆனந்தை பொறுப்பாளராக வைத்துகொண்டே தனது அரசியல் பயணத்தை விஜய் தொடர்வார்’’ என்றனர்,

விஜய்க்கு நெருக்கமன நட்பு வட்டாரத்தினர். அடுத்த படம் அரசியல் சாயல் உள்ள படம்னு பேச்சு அடிபடுதே, உண்மையா?

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *