கிலோ ரூ 130.. தக்காளி இல்லாமல் சமையல் சாத்தியமா?

தமிழ்நாட்டில் இப்போது தக்காளி விலை பற்றிதான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த சில வராரங்களாக தக்காளி விலை கிலோ ரூபாய் 80,100,120 என்று இருந்த நிலை மாறி இன்று காலை 130- ஆக உயர்ந்துவிட்டது.

தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி போன்ற  மாவட்டங்களில் தக்காளி ஓரளவு விலைகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்கடோபர், நவம்பரில் சாகுபடி செய்யப்படு்ம் தக்காளி செடிகள் மூன்று மாதங்களில் விளைந்து ஜனவரி,பிப்ரவரி, மார்ச் போன்ற மாதங்களில் மகசூல் தரும். அப்போது தக்காளி சில நாள் கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்பது உண்டு.  பறிக்கும் செலவுக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை என்று கூறி விவசாயிகள் அப்படியே விட்டுவிடுவதும் நடக்கும்

அதன் பிறகு அடுத்த பருவமாக பொங்கலுக்குப் பிறகு விதைக்கபடும் தக்காளி விதைகள் தான் ஏப்ரல் முதல் ஜுலை வரை தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் நடப்பு ஆண்டு கோடை வெயில் அதிகம் இருந்ததால் விளைச்சல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இது தான் தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரமணமாகும்.

மேலும்  சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு ங்களான ஆந்திரா, கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி வருகிறது. அங்கும் விளைச்சல் குறைந்து விட்டதால் சென்னைக்கான வரத்து சரிந்து உள்ளது.

பொதுவாகவே தமிழ்நாட்டில் சமையலில் உப்பு போன்று அவசியம் இடம் பெறும் பொருளாக தக்காளி உள்ளது. பெரும்பாலான வீடுகளில் தக்காளி இல்லாத உணவே இல்லை என்று சொல்லிவிடலாம். சாம்பார், ரசம், காரக்குழம்பு, மீன் குழம்பு, கோழி மற்றும் ஆட்டுக்கறி குழம்பு இப்படி எதை எடுத்தாலும் அதில் தக்காளி போடாமல் நமக்கு சமைக்க தெரிவதில்லை.

எனவே தான் மற்ற  காய்கறிகளில் ஏதேனும் ஒன்றின் விலை உயர்வு ஏற்படும் போது அது அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. ஆனால் தக்காளி  மற்றும் வெங்காயம் விலை உயரும் போதோ அல்லாமல் கிடைக்காமல் போயிவிடும் போதோ பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

தக்காளி விலை மீண்டும் கிலோ இருபது ரூபாய்க்கு விற்கப்படும் நாள் எப்போதோ?

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *