என் உயிர்த் தோழன் பாபுவின் மரணம் தந்த வலி.

செப்டம்பர்,20-

முதுகுத்தண்டு உடைந்து,30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்த நடிகர் ‘என் உயிர்த்தோழன்’ பாபு மரணம் கோடம்பாக்கத்தை சோகமயமாக்கியுள்ளது.

அவர் பாரதிராஜாவின் வார்ப்பு. தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜை ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோ ஆக்கினாரர், பாரதிராஜா. வெள்ளிவிழா கொண்டடிய அந்த ஒரே படத்தில் உச்சம் தொட்ட பாக்யராஜ்,குருவை மிஞ்சிய வணிக சினிமாக்களை கொடுத்தார். எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசாகவும், அவரால் அறிவிக்கப்பட்டார்.

இதேபோல், தன்னிடம் உதவியாளராக இருந்த பாபுவையும் பாரதிராஜா, ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தார். 1990 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் ஓடவில்லை.ஆனாலும் பாபுவின் நடிப்பு பேசப்பட்டது. அரசியலை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில், நண்பன் சார்லியே, பாபுவை கொலை செய்வார். இந்தப்படத்தின் மூலம் ‘என் உயிர் தோழன்’ பாபு என்றே அவர் அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, விக்ரமன் இயக்கிய இரண்டவது படமான ‘பெரும்புள்ளி’ படத்தில் கிராமத்து கேரக்டரில் பாபு நடித்தார். இந்தப்படமும் ஓடவில்லை. இரு படங்களும் தோல்வி அடைந்தாலும், பத்திரிகைகள் ‘’பாபு, இன்னொரு கமல்ஹாசன்’ என புகழ்ந்தன.

இதனால் அவருக்கு படங்கள் குவிந்தன. ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ படத்துக்குப் பிறகு முன்னணி நாயகனாக பாபு வலம் வந்தார். சினிமாவில் அவரது கொடி, உயர உயர பறக்க ஆரம்பித்த நேரத்தில் ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அதில் உயரமான இடத்திலிருந்து பாபு குதிக்க வேண்டும். ‘டூப் போட்டுக்கொள்ளலாம்’ என இயக்குநர் சொன்னார். ’இளம் காளை’ பாபு கேட்கவில்லை.’’நானே குதிக்கிறேன், தத்ரூபமாக இருக்கும் ’என மார்தட்டி உண்மையாகவே குதித்தார். அப்போது நிலைதடுமாறி விழுந்து அவருடைய முதுகுப்பகுதியில் பலத்த அடிபட்டது.முதுகு தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட போதும், அதன் பிறகு அவரால் நிமிர்ந்து உட்காரக் கூட முடியாத நிலை. நடைப்பிணமாகவே இருந்தார். பாபுவை அவரது தயார் கவனித்துகொண்டார். சில தினங்களுக்கு முன்பு பாபுவின் உடல்நிலை மோசமானதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,’ திரைத் துறையில் மிகப் பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவர்,பாபு. படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த அவரது மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார். அவரது அறிமுகங்களான விஜயன், பாண்டியன், மணிவண்ணன் ஆகியோரும் இளம் வயதிலேயே அகால மரணம் அடைந்தவர்கள் ஆவர்.

தமிழ்,தெலுங்கில் கோலோச்சிய சாவித்ரி,குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமாவில் வீழ்ந்தார்.சுமார் 20 மாதங்கள் கோமாவில் இருந்த அவர்,நினைவு திரும்பாமலேயே, தனது 45 -வது வயதில் மரணம் அடைந்தது நினைவு கூறத்தக்கது.

இந்த மரணங்கள், புதியவர்களுக்கு பாடம்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *