என்னங்க சொல்றீங்க….1983 உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்வளவு தானா!

ஜூன் – 27

1983ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட்டில் மறக்க இயலாத ஆண்டாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு வரலாற்றைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அப்போது இரண்டு முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பை கோப்பையை அள்ளிக்கொண்டு வந்தது. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது.

அவர்கள் ஒரு பெரிய ஹீரோக்களாக இந்தியா திரும்பினார்கள். ஆனால் லார்ட்ஸில் வரலாற்று சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்களின் சம்பளத்தை உங்களால் யூகிக்க முடியுமா? இந்திய அணிக்கு ஒரு நாள் கொடுப்பனவு ரூ.200 மற்றும் ஒரு ஆட்டத்திற்கு போட்டி கட்டணமாக ரூ.1500 வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் தொட்டு, அனைத்து வீரர்களுக்குமே சமமான தொகையே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 1983 உலகக்கோப்பை வெற்றி தான் இந்தியாவில் கிரிக்கெட் தற்போது இந்த அளவிற்கு உச்சத்தை எட்டியதற்கு காரணம் எனலாம்.

தற்போது ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்களே பல கோடி ரூபாயில் தற்போது வருவாய் ஈட்டுகின்றனர். மேலும், போட்டிகளின்றி விளம்பரம் போன்ற பிற வழியின் மூலம் கோடிகளை குவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *