தலைப்புச் செய்திகள் (19-02-2024)

*ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களின் வறுமை ஒழிக்கப்படும், மூன்று லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ ஆயிரம் வழங்கப்படும்… குடிசையற்ற தமிழகம் என்ற இலக்கை அடைய கிராமங்களில் எட்டு லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்டப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்.

*நாட்டிலேயே 2-வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் … 2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி ஒதுக்குவதாக அறிவிப்பு.

*சென்னையில் 2 -ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு … மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் கோவை, மதுரை, நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் உறுதி.‘

*சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும் பரந்தூரில் புதிதாக கட்டப்படும் விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயிலை விரிப்படுத்த நடவடிக்கை … கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி வரை மெட்ரோ ரயில் சேவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தங்கம் தென்னரசு உறுதி.

*சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க பட்ஜெட்டில் ரூ.2 கோடி ஒதுக்கீடு… கீழடி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் ரூ 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் உறுதி.

*கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் உருவாக்கப்படும் …. உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு.

*ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்…. தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் ரூ.120 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா கட்டுவதற்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.

*கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி… இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்றும் நீதிபதிகள் விளக்கம்.

*சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் சூரப்பட்டு , போரூர் சுங்கச் சாவடிகள் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தவிர மற்ற இடங்களில் பயணிகளை ஏற்றினால் கடுமையா நடவடிக்கை … போக்குவரத்துத் துறை எச்சரிக்கை.

*நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் .. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

*திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறுவது தொடங்கியது … முதல் நாளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விருப்ப மனுக்களை வாங்குவதில் ஆர்வம்.

*நாடளுமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் திட்டம் குறித்து இன்னும இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்… அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கமல் ஹாசன் விமான நிலையத்தில் பேட்டி.

*மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் சிப்களில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியில் இருந்து மாற்றி அமைக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தொல். திருமாவளவன் புகார் … தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 25- ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு

*தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் … ஆளுநர் உரையை சட்டசபையில் படிக்காமல் புறக்கணித்தது குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் சந்தித்து விளக்கக் கூடும் என்று தகவல்.

*பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை, ரூ 15 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு … உயர்நீதிமன்றம் மேல் முறையீடு செய்ய இருப்பதாக சேகர் கூறியதால் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.

*கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தத்தில் தாழ்த்தப்படட சமூக இளைஞரை காதல் திருமணம் செய்த பெண்ணை கடந்த 2014- ஆம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் தீர்ப்பு … காதல் திருமணம் செய்து கொண்ட சீதாவை பின்னர் குடும்பத்துடன் சேர்ந்து கொன்றதாக சரவணன் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

*மத்திய-மாநில அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடிகளை தயாரிக்க அனுமதிக்கக் கோரி சிவகாசி சுற்று வட்டார பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் … ஒரு லட்சம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார்.

*காரைக்குடியில் இந்து மற்றும் இஸ்லாமிய சமுதாயப் பெண்களை மணந்து கொண்ட பேருந்து ஓட்டுநரின் உடலை தங்கள் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய இரண்டு பெண்களும் போட்டியிடுவதால் சார்ச்சை .. நீதிமன்றத்தை அணுகித் தீர்வுக் காணும்படி காவல் துறை அறிவுறுத்தல்.

*சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை திருத்தி மோசடி செய்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரி அசி்ச் மாசிஹ் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு … ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி கவுன்சிலர்களின் வாக்குளை செல்லாத வாக்குகளாக மாற்றி பாஜக வேட்பாளர் வென்றதாக அறிவித்ததால் சர்ச்சை.

*சண்டிகார் மாநகரட்சி மேயர் தேர்தல் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மூன்று பேர் திடீரென பாஜகவுக்கு தாவல் .. மீண்டும் மேயர் தேர்தல் நடத்தப்படும் போது வெல்வதற்கு பாஜக திட்டம்.

*டெல்லி மாநில முதல்வர் அரவிந் கெஜ்ரிவார் மதுபான கொள்கை வழக்கில் ஆறாவது சம்மனுக்கும் ஆஜராக மறுப்பு … அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து அமலாக்கத் துறை ஆலோசனை.

*இந்திய விமான நிறுவனங்கள் விமானம் தரையிறங்கிய பத்து முதல் முப்பது நிமிடங்களுக்குள் பயணிகளிடம் பெட்டிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் … சில நேரங்களில் பெட்டிகள் வந்து சேருவதற்கு ஒரு மணி நேரம் கூட ஆவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்திய விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு.

*ரஷ்ய நாட்டின் எதிக்கட்சிச் தலைவர் அலெக்ஸ் நவல்னி சிறையில் மரணமடைந்தற்கு அதிபர் புட்டின்தான் காரணம் …நவல்னியின் மனைவி யூலியா புகார்.

*இந்தோனேசியாவுக்கும் ஆஸிதிரேலியாவுக்கும் இடையில் உள்ள பப்புவா நியூகினியா நாட்டில் பழங்குடி மக்களின் இரண்டு குழுக்கள் இடையே மோதல் … கடந்த இரண்டு நாளில் 60 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்.

*பாகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 341 மில்லியன் டாலராக இருக்கும் நிலையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு 365 மில்லியன் டாலர் … சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *