தலைப்புச் செய்திகள் (18-02-2024)

*தமிழக அரசின் 2024-2025 -ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் … தங்கம்.தென்னரசு நிதி அமைச்சரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்.

*வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரி இல்லாத வருவாய்கள், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை,நிதிப் பற்றாக்குறை பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் …நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் இடம் பெறும் என்றும் எதிர்பார்ப்பு.

*பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்… உழவர் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண் பட்ஜெட் இருக்கும் என்று கருத்து.

*டெல்லியை நோக்கிச் செல்வதற்கான விவசாயிகளின் போராட்டம் 6 -வது நாளாக நீடிப்பு…குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரிக்கை.

*வண்ணம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்க்குத்தான் தடை, வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்க தடையில்லை ….சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

*மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு …. தமிழ்நாட்டில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற தகவலை விரைவில் அறிவிப்போம் என்றும் சீர்காழியில் பேட்டி

*சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய், நெஞ்சக மருத்துவ பிரிவுக் கட்டடம் திறப்பு…

*இன்போசிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ₹30 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

*மத்தியபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், தமது மகனுடன் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாம். … காங்கிரசில் இருந்த பாஜகவில் சேரக்கூடும் என்ற தகவலால் பரபரப்பு.

*மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த தற்கு கமல்நாத் செயல்பாடுகள்தான் காரணம் என்ற தகவலால் அவர் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் இருந்தது… மாநில்ஙளவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்காத்தால் கட்சி மாறவுள்ளதாக தகவல்.

*சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பபட்டு வந்த மெட்ரிக் படிப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டதால் இனி மாநில அரசே வழங்கும் … வக்ப் வாரியம் மூலம் வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப் பெருந்தகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவாகள் வாழ்த்து ….விரைவில் டெல்லி சென்று கார்கே, சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திக்கவும் செல்வப் பெருந்தகை முடிவு.

*சென்னையில் கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் 44 புற நகர் ரயில்கள் பராமாரிப்பு பணி காரணமாக இன்று பகல் பொழுதில் இயக்கப்படவில்லை… புறநகர் ரயில்கள் ரத்து காரணமாக இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்

*கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு… கூலி வேலைக்காக தோட்டம் வழியே நடந்து சென்ற வசந்தம்மா, அஸ்வத்தம்மா எனற இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பலியானதால் பதற்றம்.

*சென்னயைில் விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட வணிக வளாகம் கட்டுவதற்கான நடவடிக்கையை தொடங்கியது இந்திய விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையம்… உணவு விடுதிகள், பல் வேறு கடைகள், திரை அரங்கம் போன்றவற்றை அமைத்த வணிக வளாகத்தை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு.

*கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மூன்று பேரை கொன்ற யானையை பிடிக்கக் கோரி நேற்று பல்வேறு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தியதால் பதற்றறமன சூழல் … அசாம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க கல்பெட்ட உள்ளிட்ட இடங்களில் போலீஸ் குவிப்பு .

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *