தலைப்புச் செய்திகள் (17-02-2024)

*விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு … காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.

*தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு…. புற்றுநோய் உண்டாக்கும் Rhodaminbe-B நிறமி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்….காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம்.

*டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல்…. ரயில்நிலையத்தில் நுழைந்த போது விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு.

*இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு…. மீனவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக மீனவர்கள் ஆவேசம்.

*தமிழ்நாட்டில் முதல் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ரூ.31 கோடியில் 500பேர் பணியாற்றும் வகையில் கட்டப்பட்டு உள்ளது மினி டைடல் பார்க்.

*ரூ.1,264 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்… ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வி, தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட துறைகளில் திட்டம் தொடக்கம்.

*”உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசின் செயல்பாடுகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது … மேகதாதுவில் அணை கட்டினால் 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி புகார்.

*நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த சீமான் திட்டம் … நாம் தமிழர் கட்சிக்கு விவசாயிகள் சின்னத்தை ஒதுக்காவிட்டல் வழக்குத் தொடரவும் முடிவு.

*தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் க் சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவிப்பது பற்றி நடிகர் விஜய் ஆலோசனை … பெயரில் எழுத்துப் பிழை இருப்பதை பலரும் சுட்டிக்காட்டியதால் திருத்த நடவடிக்கை.

*விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி அதிருப்தி … விஜயதாரணி உட்பட மூன்று எம்.எல்.ஏ.க்கள் அண்ணாமலையில் என் மக்கள் என் மண் பயண நிறைவு நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்.

*பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வனப்பகுதிக்குள் உயர் ஒளியுடன், ஆபத்தான முறையில் காரை ஓட்டி, யானையை விரட்டிய அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை…. வாகனத்தைக் கண்டு மிரண்டு ஓடும் யானையை வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் மிதுன் பதிவிட்டதால் அபராதம்.

*சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கம்… வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.

*கடலூர் மாவட்டம் வடலூரில் போலீசார் குவிப்பு சர்வதேச மையம் அமைப்பதால் தைப்பூசத்திற்கு வரும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மையத்தை வேறு இடத்தில் அமைக்கக் கோரிக்கை… பாமக போராட்டம்.

*தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மூலமாக ‘நவகிரக சிறப்பு பேருந்து’ சேவை வரும் 24- ஆம் தேதி முதல் தொடக்கம் … கும்பகோணம் பேருந்து நிலையத்தில் சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்து, நவகிரக கோயில்கள் அனைத்திற்கும் பயணிகளை அழைத்துச் சென்ற பின், மாலை 6 மணிக்கு மீண்டும் கும்பகோணம் வந்தடையும்.

*சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரயில் தடம் புரண்டது… தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய மூன்று சக்கரங்கள் ரயில்வே ஊழியர்களால் சீரமைப்பு.

*வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி- எப் 14 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டது இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்.

*ஜிஎஸ்எல்வி – எப்14 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இன்சாட் -3டிஎஸ் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது … இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

*டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக 54 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவு… ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்எல்ஏக்கள் கூட பிரிந்து செல்லவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.

*ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்தியதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்… எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

*டெல்லியில் ஆரம்பமான பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசியக் கவுன்சில் கூட்டத்தல் 11,500 நிர்வாகிகள் பங்கேற்பு … பிரமாண்டமான ஆலோசனைக் கூட்டத்தில் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

*டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள் அம்பாலாவில் முற்றுகை … வாய்ப்புக் கிடைக்கும் போது டெல்லிக்குள் நுழைய திட்டம்.

*ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு அதிபர் புட்டின் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ படைன் குற்றச்சாட்டு … நாவல்னி மரணத்தை கண்டித்து ரஷ்யாவில் போராட்டம் வெடிக்கும் அபாயம்.

*அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தமது சொத்துக் கணக்கை அதிகமாக காட்டி மோசடி செய்ததாக புகார் … இந்திய மதிப்பில் ரூ 3 ஆயிரம் கோடி அபாரதம் விதித்து நியூ யார்க் நீதிமன்றம் உத்தரவு.

*ராஜ்கோட்டில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்அவுட்…சிராஜ் 4 விக்கெட்களையும், ஜடேஜா, குலதீப் தலா 2விக்கெட்களையும் வீழ்த்தினர்; 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.

*இரண்டாது இன்னிங்கில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால அதிரடியாக ஆடி சதம் … ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு196 ரன் குவிப்பு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *