வெயில் கொடுமை. உ.பி.யில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 3 நாளில் 54 பேர் இறப்பு.

லக்னோ, ஜூன் 18.. உத்தரபிரதேசத்தின் பலியா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறப்புக்கு கடுமையான வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடும் வெயிலின் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உ.பி.யில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை காணப்படுகிறது.

காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் பிற பிரச்சினைகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளால் பலியா மாவட்ட மருத்துவமனை நிரம்பி வழிகிறது.

சனிக்கிழமை மட்டும் 11 நோயாளிகள் இறந்ததாக பலியா மாவட்ட மருத்துவக் கண்காணிப்பாளர் எஸ்.கே.யாதவ் தெரிவித்து உள்ளார்.

 

கூடுதல் சுகாதார இயக்குநர் டாக்டர் பி். பி. திவாரி, லக்னோவில் இருந்து மருத்துவக் குழு வரவிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இறப்புகளுக்கான காரணத்தை அந்தக் குழு கண்டறியும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

அதிக வெப்பம் அல்லது குளிர்ச்சியாக இருக்கும்போது, ​​சுவாச நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள் ஆகியோர் அதிக ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிடுவதே இந்த இறப்புகளுக்கு காரணம் என்பதும் பி.பி. திவாரியின் கருத்தாகும்.

பலியா மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகள் அதிகம் குவிவதால் அவர்கள் ஸ்ட்ரெச்சர்களைப் பெற முடியாத அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது. இதனால் நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர்களின் உறவினர்கள் தங்கள் தோளில் சுமந்து செல்கின்றனர்.

மருத்துவர் ஒருவர் “ பத்து நோயாளிகள் ஒரே நேரத்தில் வந்தால் ஸ்ட்ரக்ச்சர் தருவது கடினமாகிவிடுகிறது
“ என்று கவலையாக தெரிவித்தார்.

பலியா மாவட்டத்தில் நிகழும் மரணங்களை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக உ.பி சுகாதார அமைச்சர் பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்.

“இரண்டு மூத்த மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் நிலைமையை எழுத்துப்பூர்வமாக அரசுக்கு விரைவில் தெரிவிப்பார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடயே தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் திவாகர் சிங் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
வெப்ப அலையால் ஏற்படும் இறப்புகள் குறித்து சரியான தகவல் இல்லாமல் கவனக்குறைவாக அறிக்கை அளித்தார் என்பது அவர் மீதான புகாராகும்.

சனிக்கிழமை நீக்கப்பட்ட டாக்டர் திவாகர் சிங், “ இறந்தவர்கள் அனைவரும் வயதானவர்கள் மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். வெப்பம் காரணமாக, அந்த நோய்கள் மோசமாகி, அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர் மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகள் இருந்தபோதிலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவித்து இருந்தார்.

  1. எது எப்படியோ பலியா மாவட்டத்தில் கடந்த
    3 நாட்களில் 54 பேர் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *