இந்திய ஆடுகளங்களின் வாஸ்து …… இந்திய ஆடுகளங்களில், இந்திய அணி….ஓர் FLASHBACK!

ஜூன் 28

2 இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 08 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. இந்த பத்து மைதானங்களில் இந்திய அணியின் ODI சாதனைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

சென்னை மைதானத்தில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில், ஏழு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது.

பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற 17 போட்டிகளில் இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் உள்ளது.

டெல்லியில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2023 ஆம் ஆண்டு ICC ODI உலகக் கோப்பையில் இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது.

அகமதாபாத் மைதானத்தில் இந்தியா 10 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும், இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புனேவின் புதிய மைதானத்தில், இந்தியா ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது, அதில் நான்கு ஆட்டங்களில் வென்றது. இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடுகிறது.

ஒரு நாள் போட்டிகள், அறிமுகமானதிலிருந்து, தர்மசாலாவின் HPCA ஸ்டேடியம் 2 ODIகள் மற்றும் 8 T20 போட்டிகள் உட்பட மொத்தம் 10 போட்டிகளை நடத்தியது. இந்த ஆட்டங்களில் இந்திய அணி 1 வெற்றி மற்றும் 2 தோல்வியை பதிவு செய்துள்ளது.

லக்னோ மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு ஆட்டத்தில் விளையாடி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடுகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில், இந்தியா 19 ஒருநாள் போட்டிகளில் 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா அபார வெற்றி விகிதத்தில் உள்ளது. இந்த இடத்தில் இந்திய அணி 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *