₹75 நினைவு நாணயம் வெளியீடு! நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்புவிழா!

May 21, 2023

மத்திய அரசு வெளியிடும் 75 ரூபாய் நாணயம்! இந்த நினைவு நாணயத்தை வெளியிடுகிறது இந்திய அரசின் நிதியமைச்சகம்.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் 75 ரூபாய் மதிப்பிலான நாணயம் வெளியிடப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, 75 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதாக, மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மே 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாணயம் (Issue Of Commemorative Coin on the occasion of Inauguration of New Parliament Building) விதிகள், 2023 இன் கீழ் நாணயம் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழாவின் போது, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வெளியிடுவதற்காக, நாணயச்சாலையில் வெளியிடப்படும்,” என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாணயத்தின் விட்டம் 44 மிமீ மற்றும் அது 200 செர்ஷன்களைக் கொண்டிருக்கும். நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவற்றால் உருவாக்கப்படும்.

“நாணயத்தின் ஒரு புறத்தில் சிங்க இலச்சினை இருக்கும், அதன் அடியில் ‘சத்யமேவ் ஜெயதே’ என ஹிந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும், இடது சுற்றளவில் ‘பாரத்’ என்று தேவநாக்ரி எழுத்துக்களிலும், வலது சுற்றளவில் ஆங்கிலத்தில் ‘இந்தியா’ என்ற வார்த்தையும் இடம் பெற்றிருக்கும். சர்வதேச எண்களில் ரூபாயின் மதிப்பான 75 என்ற எண் இடம்பெற்றிருக்கும்” என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாணயத்தின் பின்புறம் நாடாளுமன்ற வளாகத்தின் படம் இருக்கும். “சன்சாத் ஸ்னகுல்’ என்ற எழுத்து மேல் சுற்றளவில் தேவநாக்ரி எழுத்திலும், ஆங்கிலத்தில் ‘Parliament Complex’ என்ற கல்வெட்டு நாணயத்தின் கீழ் சுற்றளவில் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் எடை 35 கிராம் அளவில் இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிகழ்வின் நினைவாக, நினைவு நாணயங்கள் (Commemorative Coin) வெளியிடப்படுகிறது. அவை ஒரு சிறப்பு வடிவமைப்பில் இருக்கும். இந்த நாணயங்கள் பொதுவான புழக்கத்திற்கானவை கிடையாது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவாக 1964 ஆம் ஆண்டு முதல் நினைவு நாணயத் தொடரை ஆர்.பி.ஐ வெளியிடப்பட்டது. சிறப்பு நாணயங்களை சேகரிக்க விரும்பும் மக்கள் இதுபோன்ற நாணயங்களை வாங்கி சேமிப்பது வழக்கம்.

நியூடெல்லி சன்சாத் மார்க்கில் புதிதாக கட்டப்படுள்ள நாடாளுமன்ற வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை (மே 28 , 2023) அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மே 28ல் திறந்து வைக்கிறார். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், ‘செங்கோல்’ (‘Sengol’) ஒன்றையும் பிரதமர் மோடி நிறுவுகிறார். ஆகஸ்ட் 1947 இல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவுக்கு ‘செங்கோல்’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி 2020 டிசம்பர் 20 அன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 9500 கிலோ எடையுடன் 6.5 மீ உயரம் கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட சிங்க இலச்சினையும் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நிறுவப்பப்ட்டுள்ளது. சிங்க இலச்சினையைத் தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு துணை அமைப்பும் கட்டப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *