ரூ. 75 நாணயம் அறிமுகம் – புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவையொட்டி மத்திய அரசு அறிவிப்பு

மே.26

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா நாளை மறுநாள் (மே.28) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திறப்பு விழாவையொட்டி, ரூ.75 நாணயம் புழக்கத்திற்கு வரவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், வலதுபுறத்தில் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் இடம்பெறுகிறது.

இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், நாடாளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது.

இந்த நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் போர்பார்ட் (four-part) அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் ஆகிய உலோகங்கள் இடம்பெற்று இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *