பேனா நினைவுச் சின்னம்; தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!

May 15,2023

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து, அதனை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு முன்பாக ஐ.என்.எஸ் கடற்படை தளத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும், பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளுக்காக எந்த நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது என்றும், திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைத்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

கட்டுமானக் கழிவுகளை நீர்நிலைக்கு அருகே கொட்டக்கூடாது என்றும், கடல் ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பேனா நினைவுச் சின்னப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *