நெல்லையில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தல் விவகாரம் – ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் இன்று முதல் விசாரணை தொடக்கம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில், திங்கள்கிழமை முதல் விசாரணை நடைபெறும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை நேரில் ஆஜராகலாம்.

ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்பினால் அவர்களும் நேரில் வரலாம். பாதிக்கப்பட்டு இதுவரை புகார் அளிக்காத நபர்கள் யாரேனும் இருப்பின், அவர்களும் விசாரணை அதிகாரியை சந்திக்கலாம்.
விசாரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க இயலாதவர்கள், ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சலிலும், 82488 87233 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *