தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.. தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மெர்க்கண்டைல் வங்கிக்கு  இந்தியா முழுவதும் 500- க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன இந்த வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பித்து இரவு வரை வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கடந்த ஐந்துContinue Reading

ஜூன் -29 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரெட் ஜெயி்ட்ஸ் மூவிஸ்  தயாரிக்க ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் கடைசி  படம் மாமன்னன் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மேலும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்Continue Reading

ஜூன்- 28 சிறப்பான செயல்பாடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச அளவிலான தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் கூட தர வரிசையில் சறுக்கி இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பெரிதும் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு பெர்ஃபாமன்ஸை தெறிக்கவிட்டிருக்கிறது. . இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து விட்டு செல்கின்றனர். குறிப்பாக பின் தங்கிய நாடுகள், சிறிய தீவுகள்Continue Reading

ஜூன் – 27 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருக்கிறார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகContinue Reading

ஜுன் 26, முதலமைச்சரிடமும் மதிமுக தலைவர் வைகோ விடமும் தனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லக் கடிய அளவிற்கு மனநிலை உள்ளதாக மதுரை மாமன்ற கூட்டத்தில் மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி 19 -ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மதிமுக உறுப்பினர் பூமிநாதன் கலந்து கொண்டு தனது தொகுதியில் பணிகள் முறையாக நடைபெறவில்லைContinue Reading

ஜூன், 26- நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். முதல் 10 இடங்களைப் பெற்ற   மாணவ மாணவிகள் விவரம். 1. நேத்ரா – சிறுதொண்டநல்லூர், தூத்துக்குடி 2. ஹரிணி – ஜடயம்பட்டி, தருமபுரி 3. ரோஷினி பானு – மேலவாடி, திருச்சி 4. கௌரிசங்கர் – பெத்தாம்பட்டி, சேலம் 5. சாந்தகுமார் – தருமபுரி 6. ராஜேஷ் – சடையம்பாளையம்,Continue Reading

ஜூன், 26- குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகைContinue Reading

JUNE 21, 23 விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை கோலிவுட் பிரபலம் ஒருவர் இயக்குகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், அவரின் செல்ல மகனும் சேர்ந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, சூர்யா ஹீரோ மாதிரி இருக்கிறாரே. அவரை ஹீரோவாக்கிவிடுங்கள் மக்கள் செல்வனே என்றார்கள். ரசிகர்களின் கோரிக்கை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆம், தன்Continue Reading

June21, 23 பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருடைய நியமனத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்கமுடியும். ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்தContinue Reading

June 21, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள்Continue Reading