தேசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் – பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 2023 MTB சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,

அரியானாவில் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 19வது தேசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு எம்.டி.பி. சைக்கிள் ஓட்டுதல் அணி சார்பில் 16 சைக்கிள் வீரர்கள் பங்கேற்றனர். இதில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றனர். அதன்படி, ஹாசினி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும், ஸ்மிருதி வெண்கல பதக்கத்தையும், பிரனேஷ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதையடுத்து, பதக்கங்களுடன் கோவைக்கு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், கோவை மாவட்ட சைக்கிள் ஓட்டுதல் சங்க நிர்வாகிகள் மற்றும் வெஸ்டர்ன் வேலி சைக்கிள் கிளப் நிர்வாகிகள் கலந்துகொண்டு, பதக்கம் வென்ற வீரர்களை வரவேற்று பாராட்டுத் தெரிவித்தனர்.

6 மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்ட கடுமையான பயிற்சி மற்றும் போட்டிகளை தொடர்ந்து, இந்த மாணவர்கள் தேசிய அளவில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளுக்கு பயிற்சிக்காக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூரில் உள்ள வெஸ்டர்ன் வேலி சைக்கிள் ஓட்டுதல் கிளப்பில் மவுண்டன் பைக் பயிற்சி மற்றும் பயிற்சிக்கான பிரத்யேக இடம் உள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும் தேசிய போட்டிக்கு தங்களது சொந்த செலவில் சென்றுவந்துள்ளனர். இந்த அளவு சாதிக்க முடிந்தால், மேலும் ஸ்பான்சர்கள் அல்லது நிதியுதவிகள் கிடைத்தால், இவர்கள் மேலும் சிறப்பாகச் சாதிப்பார்கள் என்றும், பதக்கம் வென்ற மூன்று பேருக்கும் சர்வதேச அரங்கில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *