கோவையில் 20 இடங்களில் பவர் ஜார்ஜிங் மையம் - டாடா நிறுவனம் ஒப்பந்தம்

ஏப்ரல்.20 கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ செய்யும் நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கூட்டரங்கில்‌ கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் இணைந்து கோவை மாநகரில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் மற்றும் டாடா பவர்‌ நிறுவன விற்பனை தலைவா்‌Continue Reading

திரிஷாவிடம் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்கள்

ஏப்ரல். 17 கோவையில் பொன்னியின் செல்வன் 2ம் பாக விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து ரசிர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரோஜோன் மாலில் பொன்னியின் செல்வன்-2 விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்தப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர்Continue Reading

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாடும் வகையில், 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சித்திரை 1ம் தேதி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினம் என்பதால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஒரே நேரத்தில் பலContinue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் மோகன ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று உற்பத்திContinue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் பெண்கள் உட்பட சுமார் 200.க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனContinue Reading

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்டContinue Reading

துபாயில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த அரியலூரை சேர்ந்த பயணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2Continue Reading

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த பதினோரு வயது சிறுவன் மற்றும் ஆறு வயது சிறுமி ஆகியோர் இணைந்து யோகாவின் திம்பாசன கலை மற்றும் கால்களால் முட்டை எடுத்து வைப்பது என இருவேறு சாதனை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் – ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா. ஆறு வயதான சிறுமி ரித்விகா, யோகா கலையில் பயிற்சி பெறContinue Reading

கோவை துடியலூரில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாக மத்திய அரசின் சார்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (PM NAM) மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், கோவை, பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி வாய்ந்த இளைஞர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து கொள்கின்றனர். நேற்று நடைபெற்றContinue Reading

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியை நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி பார்வையிட்டனர். கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் “எங்கள் முதல்வர்-எங்கள் பெருமை” கண்காட்சியை கடந்த 7ஆம் தேதி நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி, இன்று புகைப்பட கண்காட்சியைContinue Reading