திருமணத்திற்காக மதம் மாறினேன் என கூறுவதா? – நடிகை குஷ்பு ஆவேசம்

தனது கணவரை திருமணம் செய்துகொள்வதற்காக நான் மதம் மாறினேன் என கூறுவது உண்மையில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணிய உறுப்பினராக உள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக குஷ்பு குறித்து சிலர் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது குஷ்பு தனது கணவரை திருமணம் செய்துகொள்வதற்காக மதம் மாறியதாக அவதூறு செய்திகள் பர்ரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த அவதூறு கருத்துக்களுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்ட பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் திருமணத்தை கேள்வி கேட்பவர்கள், அல்லது நான் திருமணம் செய்து கொள்ள மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவு செய்து கொஞ்சம் அறிவு பெறுங்கள். துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் இருக்கும் ‘சிறப்பு திருமணச் சட்டம்’ பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. நான் மதம் மாறவும் இல்லை, அவ்வாறு கேட்கவும் இல்லை. எனது திருமணம் நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. எனவே சந்தேகம் உள்ளவர்கள் தயவு செய்து மலையேறவும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *