*தேசியக்  கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்துவதால் பாரதீய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை .. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேச்சு.

*திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு அடியோடு  கெட்டு விட்டது, போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது … அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு  மீது சரமாரி புகார்.

*நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும், இருபது ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யவேண்டும் … கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என்பது உட்பட அதிமுக செயற்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

*சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அதே வேளையில் கோவையில் ஓ, பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்கள் உடன் ஆலோசனை .. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்ததாக தகவல்.

*தூத்துக்குடியி்ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு .. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தங்கம்.தென்னரசு,கனிமொழி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு.

*வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு உதவித் தொகை வழங்கக் கோரி நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் தங்கம்.தென்னரசு 72 பக்க மனு … சென்னை வெள்ளப் பாதிப்பு மற்றும் தென் மாவட்ட பாதிப்புகள் குறித்து விரிவான விவரங்களை பட்டியிலிட்டு நிதி கொடுக்குமாறு கோரிக்கை.

*வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழநாட்டுக்கு ரூ 12659 கோடி தேவைப்படுவதாக பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்ததை சுட்டிக் காடடி தமிழக அரசு மனு..  தேவையான நிதியை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தல்.

*நெல்லை மாவட்டத்தில்  கன மழையால் அதிகம் பாதிக்கப்புக்கு ரூ 6 ஆயிரமும் ஓரளவு பாதிப்புக்கு ரூ ஆயிரமும் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது … நியாய விலைக் கடைகள் மூலம் 29- ஆம் தேதி பணத்தை ரொக்கமாக வழங்க நடவடிக்கை.

*சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் ஜெகநாதன் ஊழல் புகாரின் பேரில் கைது … போலி ஆவணங்களை தயாரித்து கட்டம் கட்ட ஒப்புதல் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெகநாதனை கருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை.

*தமிழ்நாட்டில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்திய  சுனாமி தாக்கிய 19 -ஆம் ஆண்டு  நினைவு நாள் இன்று … சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி, மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி.

*சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்…. முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி.

*விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் ஜனவரி 26- ம் தேதி மு.க.ஸ்டாலின் பங்கேற்புடன் நடைபெறும் என திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு.. இம்மாதம் டிசம்பர் 29-ம் தேதி நடைபெற இருந்த மாநாடு தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளிவைப்பு.

*வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய பேருந்து நிலையத்தை டிசம்பர் 30 திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் … புதிய பேருந்த நிலையத்தை புத்தாண்டு முதல் முழு வீச்சில் செயல்படுத்த நடவடிக்கை.

*எண்ணூரில் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்ட்ட பொதுமக்களுக்கு அன்புமணி தலைமையில் பரிசோதனை முகாம் .. மருத்துவருக்கான உடை அணிந்து சிகிச்சை அளித்தார் அன்புமணி.

*சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 20 ஆயிரம் போலீசரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டம் … 400 இடங்களில் வாகன சோதனை நடத்தவும் மெரினாவில் குளிக்கவும் தடை விதிக்க முடிவு.

*சென்னை நொளம்பூரில் அமுமுக பிரமுகர் ஜெகன் கடந்த செப்டம்பரில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கூலிப்படை தலைவன் கைது … ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல முயன்ற மாரியை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை.

*திருப்பதியில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் ஜன.1 வரை வழங்கி முடிந்து விட்டது .. டோக்கன் இல்லாத பக்தர்கள் யாரும்  திருப்பதிக்கு வர வேண்டாம் என்ற அறங்காவலர் குழு வேண்டுகோள்.

*நடராஜர் கோவில் மார்கழி தேரோட்டத்தை காண்பதற்கு பல ஆயிரம்  பக்தர்கள் சிதம்பரத்தின் குவிந்தனர்  … பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடுவதற்கு தீட்சிதர்கள் விதித்து உள்ள தடையால் பரபரப்பு.

*துபாயில் இருந்து நிகாரகுவா என்ற மத்திய அமெரிக்க நாட்டுக்கு 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த விமானம் மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது .. மனிதக் கடத்தல் நடைபெறுவதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் தரையிறக்கி சோதனைக்கு ஆளானா  விமானம்.

*ஜம்மு காஷ்மீரில் லே பகுதியில் அதிகாலை 4.33 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு …லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேதங்கள் பெரிய அளவில் இல்லை.

*இந்தியாவுக்கு வந்த வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆழ்கடடிலில் பதுங்கி இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி … ஐ.என்.எஸ். இம்பால் என்ற அதி நவீன போக்கப்பல் தொடக்க விழா நிகழச்சியில ராஜ்நாத் பேச்சு .

*கருங்கடல் பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷ்யா போர்க்கப்பலுக்கு கடுமையான சேதம்.. தாக்குதல்  நடந்ததை ஒப்புக் கொண்ட ரஷ்ய பதில் தாக்குதல் நடத்த திட்டம்.

*கோச்சடையான் படத்திற்காக ஆட்- பியுரோ நிறுவனத்திடம் ரூ 6 கோடி கடன் பெற்றதற்கு உத்தரவாதம் அளித்த வழக்கு .. பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்திற்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன்.

*வேட்டையன் படப்பிடிப்புக்காக கன்னியாகுமரி சென்றார் நடிகர் ரஜினிகாந்த் ..  ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சான்,மஞசு வாரியார் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *