தலைப்புச் செய்திகள் (03-01-2023)

*போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு… பழைய ஓய்வூதிய திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்.

*தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி … போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ள போராட்டத்தால் அரசு பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல்.

*போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்கங்களுடன் பொங்கலுக்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு… போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்கள் போராட்ட அறிவிப்பை கைவிடுமாறு வேண்டுகோள்.

*சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி,மனைவி விசாலாட்சி இருவரும் மேல்முறையீடு …. உச்சநீதிமன்றம் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தண்டனையை நிறுத்திவைத்தால் மட்டுமே இருவரும் சிறை செல்வதை தவிர்க்க முடியும்.

*கடந்த 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்த போது பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தார் என்பது வழக்கு … சிறைதண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியை இழந்தவர் பொன்முடி.

*பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை…. அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.

*பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது… எந்தக் காரணமும் இல்லாமல் நடப்பாண்டில் பொங்கல் ரொக்கப்பரிசு நிறுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தமிழர் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும் என்றும் டாக்டர் ராமதாஸ் கேள்வி.

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு … சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த 4 ஜுன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

*சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ . மைதானத்தில் பிரமாண்ட புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி… பதிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் பொற்கிழி விருதை எழுத்தாளர்கள் தமிழ்மகன், ஆ.சிவசுப்பிரமணியன்,உமா மகேஷ்வரி உள்ளிட்டவர்ளுக்கு வழங்கி கவுரவிப்பு.

*சென்னை- மைசூர் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இன்று அதிகாலை தொடங்கியது … சென்னை சென்ட்ரல் நிலையத்தில் காலை 5.50 மணிக்கு மைசூருக்கு புறப்ட்ட பகல் 12.20 மணிக்கு மைசூர் சென்றடைந்தது.

*மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு…. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மேல் முறையீடு செய்து உள்ளவர்கள் 11.85 லட்சம் பேர்.

*கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 8 சிறப்பு தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை…. தமிழகம் முழுவதும் 1.06 கோடி பேருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களும் நியமனம்.

* மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள் அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை தகுதிச்சான்று வழங்க விண்ணப்பம் வெளியீடு. மாடு திமில் தெரியும் வகையிலும் மாட்டின் உரிமையாளர் உடன் புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய அறிவுரை.

*அதிமுகவுக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று அதிமுக ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி …சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது என்றும் வேண்டுகோள்.

*பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்… அதிமுகவின் சாதனைகளையும், திமுக அரசு செய்யும் தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*சென்னை முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் உள்ளதாக 2019-ல் பாஜக நிர்வாகி சீனிவாசன், தேசிய பட்டியலின ஆணையத்தில் அளித்த புகாரை எதிர்த்த வழக்கில் நடவடிக்கை.

*சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்ததால் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் சஸ்பெண்ட்… இருவரும் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் பேரில் தற்போது தற்காலிக பணி நீக்கம்.

*சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் … சர்வீஸ் சாலை வழியாக இயக்கப்படும் வெளியூர் பேருந்துகளை ஜி.எஸ்.டி. சாலை வழியாக இயக்கக் கோரிக்கை.

*பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு … 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவு.

*சென்னை தியாகராயர் நகர் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கு.க செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார்… கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் செல்வம்.

*அதானி குழுமம் மீது ஹிண்டன் பார்க் அமைப்பு தெரிவித்த புகார்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் …. முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரம் உள்ள செபி அமைப்பு 3 மாதத்தில் விசாரணையை நடத்தி முடிக்கவும் உத்தரவு.

*ஹிண்டர் பார்க் அறிக்கை குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட மறுத்ததன் மூலம் உண்மை வென்றுவிட்டது என்று கௌதம் அதானி கருத்து.. தீர்ப்புக்குப் பிறகு அதானி குழும பங்குகள் 12 சதவிகிதம் உயர்ந்து விற்பனை.

*கேரளாவில் காங்கிரஸ், இடது முன்னணியினர் மாறி மாறி ஆட்சி செய்து வஞ்சனையை விதைத்து வருகின்றனர்…குடும்ப அரசியலுக்கு முக்கியதுவம் கொடுத்து, மக்களை கண்டுகொள்ளவில்லை என்றும் திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி புகார்.

*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமக்கு அமலாக்கத் துறை மூன்றாவது முறையாக அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை … மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் துணை முதலமைச்சராக இருந்த மணீஸ் சிசோடியா உள்ளி்ட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் கெஜ்ரிவாலையும் விசாரணைக் அழைக்கிறது அமலாக்கத் துறை.

*நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை ஏழு முறை சம்மன் அனுப்பியும் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆஜராகததால் ஜார்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு … கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் மனைவியை முதலமைச்சராக்க சோரன் திட்டம்.

*அசாம் மாநிலத்தில் கோல்காட் மாவட்டத்தில் அதிகாலை வேளையில் பேருந்து ஒன்று லாரிகள் மோதி விபத்து .. பேருந்து பயணிகள் 12 பேர் இறப்பு ,25 பேர் காயம்.

*லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்தில் தங்கியிருந்த ஹமாஸ் இயக்கத்தின் துணைத் தலைவர் சலேக் அல்- அரவுரி மற்றும் இரண்டு தளபதிகளை இஸ்ரேல் குண்டு வீசிக் கொன்றதாக தகவல் … லெபனான் மண்ணில் தாக்குதல் நடத்தப்பட்டது அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று ஹமாஸ் கண்டனம்.

*ஈரானில் கெர்மான் என்ற இடத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழப்பு. 150க்கும் மேற்பட்டோர் படுகாயம். 2020-ல் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஜெனரல் காசிம் சுலைமானின் நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த இடத்தில் குண்டு வெடிப்பு.

*ஜப்பானின் டோக்கியோ விமானநிலையத்தி்ல் பயணிகள் விமானம் மோதியதில் கடற்படை விமானத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்து குறித்து விசாரணை .. பயணிகள் விமானம் தீப்பிடித்த உடன் அதில் இருந்த 379 பயணிகளை உடனடியாக மீட்ட விமான நிலைய நிர்வாகத்திற்கு நிபுணர்கள் பாராட்டு.

*அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தடை விதித்து மெயினி மாகாண உச்சநீதிமன்றம் தீப்பளித்ததை எதிர்த்த டொனால்டு டிரம்ப் மேல் முறையீடு … நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கொலோரிடா மாகாண நீதிமன்றமும் தடைவிதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

* சாருக்கான் நடிப்பில் கடந்த 21- ஆம் தேதி வெளியான டன்கி படம் கடந்த 12 நாட்களில் ரூ 400 கோடி வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவி்ப்பு .. கடந்த ஆண்டு சாருக் நடிப்பில் வெளியான பதான், ஜவான், டன்கி ஆகிய மூன்று படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி.

*நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை கன மழைப் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல்.. நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு.

*மனித உடலில் கண்டறியாமல் போகக்கூடிய புற்ற நோய் செல்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் நவீன கருவி .. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள இந்த கருவி மிகவும் நவீனமானது என்றும் கருத்து.

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்… முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணியும் தடுமாற்றம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *