தலைப்புச் செய்திகள் (04-01-2023)

*போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத தயார் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு …. போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கம்.

*மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் சந்தித்து வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கேட்க திட்டம் … நேரம் ஒதுக்குமாறு அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை.

*நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் ஜனவரி 8- ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்பாடு … மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அழைப்பு.

*கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும்…. பொங்கல் தொகுப்புக்கான கரும்பை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டிப்பு … கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜியின் காவல் நீடிக்கப்படுவது 14- வது முறை.

*பொன்முடி அமைச்சராக இருந்த போது அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்ததாக அமலாக்கத் துறை தொடர்ந்து உள்ள வழக்கு … பொன்முடி மகன் கௌதம சிகாமணி இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைப்பு.

*டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து சென்னையில் வரும் 19- ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்.. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுடன் உதயநிதி சந்திப்பு.

*புயல் வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டை தீவிர பேரிடராக அறிவிக்கவும், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கிடவும் வலியுறுத்தல் …தமிழகம் தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் தொல்.திருமாவளவன் பங்கேற்பு.

*சென்னை தண்டையார்பேட்டையில் போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன், ஸ்டீஃபன் என்ற இருவர் கைது …தனிப்படை போலீசார் நடவடிக்கை.

*மதுரை மாவட்டம் அவணியாபுரத்தில் 15- ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம்- தேதியும் ஜல்லிக்கட்டு்ப் போட்டி .. புகழ் பெற்ற அலங்கா நல்லூரில் 16 ஆம் தேதியும் போட்டி நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

*ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும்போது சாதிப் பெயரை குறிப்பிடக்கூடாது… போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுதிமொழி ஏற்பது குறித்து பரிசீலனை செய்யுமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

*செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்தது விபத்து… காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

*சென்னையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் …. 2019-ல் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்திய தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்து வருவதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் வாதம்.

* சென்னையில் ஜனவரி 6- ஆம் தேதி நடைபெறும் மரத்தான் போட்டியை முன்னிட்டு அன்று அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.. ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்.

*கடந்த 2014 -முதல் 2013 – மார்ச் வரை மத்திய அரசு, தமிழ்நாட்டிடம் பெற்ற வரி ரூ 6.23 லட்சம் கோடி, திருப்பிக் கொடுத்தது ரூ 6.96 லட்சம் கோடி… புள்ளி விவரங்களை வெளியிட்டு தமிழ்நாட்டு்க்கு மத்திய அரசு அதிக நிதி கொடுத்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரி வால் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட உள்ளதாக பரவிய தகவலால் டெல்லியில் பரபரப்பு … மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை கெஜ்ரிவால்.

*லட்சத்தீவின் பரப்பு சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் இதயம் பெரியது; இங்கு நான் பெறும் அன்பு, ஆசியால் மிகவும் மகிழ்ந்தேன்’ … பிரதமர் மோடி இரு தினம் முன்பு லட்சத் தீவு சென்றிருந்த போது கடலில் குளித்த படங்களை இணையத்தில் வெளியிட்டுப் பதிவு.

4
*மோடி தாம், கடலில் குளித்த படங்களை வெளியிட்டதை அடுத்து கடந்த ஆண்டு ராகுல் காந்தி கடலில் நீந்திய படங்களை வெளியிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் பதில் … இரண்டு படங்களும் வலைதளத்தில் வைரலானது.

*மணிப்பூர் மாநிலம் எட்டு மாதங்களாக எரிந்தும் அங்கு செல்லாத பிரதமர் மோடி லட்சத் தீவில் கடலில் குளித்து மகிழ்கிறார்.. படங்களை வெளியிட்டு காங்கிரஸ் விமர்சனம்.

*ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி தலைவரும், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…. டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்த ஷர்மிளாவுக்கு முக்கியப் பொறுப்பு தரவுள்ளதாக தகவல்.

*கர்நாடகா மாநிலம் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றாமல் 1000-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கடந்த 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம்… டேங்கர் லாரிகளில், உதவியாளர்கள் கட்டாயம் என்ற எண்ணெய் நிறுவனத்தின் நிபந்தனைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வி.

*செங்கடல் வழியே பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஹவுதி போராளிகள் இயக்கம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடு்ம் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக எச்சரிக்கை … இஸ்ரேல் தொடர்புடைய வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு பதில்.

*நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வன்முறை மற்றும் சட்டவிரோத காட்சிகள் அதிகம் இருப்பதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரும் வழக்கு … லியோ படத்தில் உள்ள வன்முறைக் காட்சிகள் குறித்து விளக்கம் தருமாறு லேகேஷ் கனகராஜ்க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

*கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்கா இருவரும் அனுமதியின்றி வீடு கட்டுவது தெரியவந்ததால் கட்டுமானப் பணி நிறத்தப்பட்டு உள்ளதாக அரசு தரப்பு பதில் … இருவர் மீதும் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு விளக்கம் தருமாறு உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை ஆணை.

*தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது…இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

*டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய போட்டியாக மாறிய இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ‘Freedom Trophy – 2024’ தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… 656 பந்துகளில் (AUS vs SA, 1932) முடிவுற்றதே இதற்கு முந்தைய குறுகிய நேர போட்டியாக இருந்த நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதிய 2-வது டெஸ்ட் போட்டி 642 பந்துகளில் முடிவுக்கு வந்துள்ளது.

*உலகக்கோப்பை 2024, டி- 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தமது முதல் ஆட்டத்தில் ஜுன் 5 – ஆம் தேதி அயர்லாந்து அணியுடனும் ஜுன் 9 – ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் மோதல் … அமெரிக்காவில் ஜுன் மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கு மொத்தம் 20 அணிகள் தேர்வு.

*சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் லேசான மழை .. மேலும் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *