கோவையில் 6 இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம் -289பேர் மீது வழக்கு

கோவை மாவட்டத்தை “விபத்தில்லா கோவை”யாக உருவாக்கும் நோக்கத்தில் மாநகரின் 6 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம் நடத்தப்பட்டது.

கோவை மாநகரத்தில், வாகன விபத்துகள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, “விபத்தில்லா கோவையாக” உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் 6 இடங்களில் (பொள்ளாச்சி ரோடு – ரத்தினம் காலேஜ், பாலக்காடு ரோடு – நேரு காலேஜ், பேரூர் பைபாஸ் ரோடு பி-4 உக்கடம் காவல் நிலையம் முன்பு, பாலசுந்தரம் ரோடு டிராபிக் பார்க் அருகில், அவிநாசி ரோடு கொடீசியா ஜங்ஷன், சத்தி ரோடு அத்திபாளையம் ஐங்ஜன் ) சிறப்பு வாகன தணிக்கை முகாம் நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 348 இருசக்கர வாகன ஓட்டிகளில், 289 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 59 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர் பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டிய 27 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதியப்பட்டது.

மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில்  உள்ள பயிற்சி மையத்தின் மூலமும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *