கோவையில் கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் பிரசவம்! – அழகான ஆண்குழந்தை பிறந்தது..!!

மே.10

கோவை அருகே பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்ததது.

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (வயது21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் தமிழ் அழகன், டிரைவர் சக்திகுமார் ஆகியோர், அனுசியாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது குழந்தையின் தலை வெளியே தெரிந்ததால், உடனடியாக அனுசியா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்ததில், அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, தாயையும், குழந்தையையும் சிகிச்சைக்காக ஆம்புலன்சு ஊழியர்கள் துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொண்ட மருத்துவ உதவியாளர் தமிழ் அழகன், டிரைவர் சத்திகுமார் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *