நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்ற கீழமை நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமக்கப்பட்டுள்ளது. தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் திங்கள் கிழமை முதல் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்று தெரிவித்து உள்ளார். தனி மனித இடைவெளியைப் பின்பற்றி கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பதிவாளர் வழக்குப் பட்டியல் இல்லாத வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த உத்தரவு கீழமை நீதிமன்றங்களுக்கும் பொருந்தம் என்று அவர் தெவித்து இருக்கிறார்.
2023-04-14