ஏ.டி.எம் மூலம் மதுபானங்கள் விற்பனை – டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம்

ஏப்ரல்.29

தமிழகத்தில் உள்ள வணிகவளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (ஏடிஎம்) மூலம் மது விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இந்த விற்பனைக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில், நான்கு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட, கூடுதல் விற்பனைக்கு மது விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளன. மேலும், தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடை ணியாளர்கள் மேற்பார்வையில் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும். கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *