உதயநிதியின் “மாமன்னன்” பர்ஸ்ட்லூக் வெளியீடு..! அரசியல்வாதி லுக்கில் வடிவேலு மாஸ்…!!

மே.1

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தின் பர்ஸ்டலுக் வெளியாகியுள்ளது. அதில், கதை நாயகனான உதயநிதி ஸ்டாலின் வாளுடனும், நடிகர் வடிவேலு அரசியல்வாதி கெட்டப்பிலும் மாஸ் காட்டியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்ற பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தயாரித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தற்போது மாமன்னன் படத்தை இயக்கியள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை, ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாகவும், முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.அதில், நடிகர் வடிவேலு அரசியல்வாதி கெட்அப்பிலும், உதயநிதி ஸ்டாலின் கையில் வாளுடனும் அமர்ந்திப்பதுபோல் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் பலமான கதைக்களத்துடன் மக்கள் மனதில் இடம்பிடித்த நிலையில், மாமன்னன் படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *