“இப்படி கொள்ளையடிக்கிறீங்களே மோடி ஜி” – மத்திய அரசை வெளுத்து வாங்கிய மம்தா

மேற்கு வங்கத்தின் ஜி.எஸ்.டி. பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கினார்.

மேற்கு வங்கத்தின் மீதான மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாள் தர்ணாவை கடந்த புதன்கிழமையன்று தொடங்கினார். இதுக்குறித்து மம்தா பேசுகையில், அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூட்டாட்சி அமைப்பை சீரழித்து வருகின்றனர். பா.ஜ.க. அல்லாத அனைத்து மாநிலங்களையும் பறிக்கிறார்கள். நமது ஜி.எஸ்.டி. பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.

100 நாள் வேலை பணத்தை நிறுத்துகிறார்கள். எங்களை தேச விரோதிகள் என்கிறார்கள். அவர்கள் மட்டுமே தேசியவாதிகள், நாங்கள் தேசபக்தர்கள் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை எதிர்த்து போராடுவோம். எங்கள் தர்ணா இருட்டடிப்பு செய்யுமாறு அனைத்து செய்தி சேனல்களையும் அவர்கள் (பா.ஜ.க.) கேட்டுக் கொண்டுள்ளனர். ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். நமது ஜனநாயகத்தை பா.ஜ.க. அழித்து விட்டது. அதானி நந்தலாலுக்காக எல்.ஐ.சி.யை விற்பனை செய்தீர்கள். பா.ஜ.க.வுக்கு எதிராக ஏதாவது சொன்னால், சபையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.

அவர்களுக்கு எதிராக பேசினால் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யை அனுப்புகிறார்கள். எவ்வளவு நேர்மையான கட்சி அவர்கள், நிலப்பிரபுக்கள் போல் நடந்து கொள்கிறார்கள். நான் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது, எனக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட எதிர்பாளர்களை பா.ஜ.க. வாடகைக்கு அமர்த்தியது. மேலும் அவர்களுக்கு டாலரில் பணம் கொடுத்து வங்கத்தில் இனப்படுகொலை நடந்ததாக கூறியது. இனப்படுகொலை என்பதன் அர்த்தம் புரிகிறதா? இது கோத்ராவில் நடந்தது. இது பில்கிஸ் பானோவுடன் நடந்தது. இது என்.ஆா.சி. மற்றும் சி.ஏ.ஏ. போராட்டங்கள் போது நடந்தது. இது டெல்லியில் (2020 கலவரம்) நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *