தலைப்புச் செய்திகள்… (25-12-2023)

*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலம் பச்சரிசி, சக்கரை, கரும்புடன் ரூ ஆயிரம் தருவதற்கும் நடவடிக்கை .. ஜனவரி இரண்டாவது வாரத்தில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்.

*நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பற்றி விவாதிக்க சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக் குழு நாளை கூடுகிறது … எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி உறுப்பினர்கள் கருத்தைக் கேட்க எடப்பாடி பழனிசாமி முடிவு

*நெல்லை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியல் படி 16 பேர் உயிரிழப்பு…1064 பேர் வீடுகளை இழப்பு; 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28,392 கோழிகள் இறப்பு.

*தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பாதிப்பு தொடருகிறது .. மின்சார வசதிகள் கிடைக்காதால் கிராமங்கள் இருளில் தவிப்பு.

*வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள சென்னைக்கான புதிய பேருந்து நிலையம் பொங்கலுக்கு முன் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பேட்டி … ஒரு லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து 2,310 பேருந்துகள் இயக்கும் வசதிகள் உள்ளதாக விளக்கம்.

*சென்னை அடுத்த எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய எண்ணெய் கசிவு இறகுகளில் படிந்ததால் பறவைகள் பறந்து சென்று இரை தேட முடியாமல் தவிப்பு .. நண்டு உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களும் கருப்பு நிறமாக மாறிய பரிதாபம்.

*எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு அறிவித்து உள்ள ரூ 7500 என்ற இழப்பீட்டை இரண்டு மடங்காக உயர்த்தித் தருமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் … படகுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ 50 ஆயிரமாகவும் உயர்த்திக் கொடுக்கும்படியும் அரசுக்கு கோரிக்கை.

*திண்டுக்கல் மருத்துவரிடம் அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியது தொடர்பாக நடந்த சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் .. அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு . சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைப்பு.

*பெங்களூரு மாநகரத்தில் வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகைகளில் 60 சதவிகித இடத்திற்க்கு கன்னடத்தால் எழுதப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகராட்சி நிர்வாகம் அறிவிப்பு ..பெயர் பலகைளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆதிக்கத்தைக் குறைக்க நடவடிக்கை.

*ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை இரண்டாவது நடைப்பயணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணையவுள்ளதாக தகவல்; ஜனவரியில் இந்தியாவின் கிழக்கு எல்லையில் தொடங்கி மேற்கு எல்லையில் முடிவடைய உள்ளது இரண்டாவது நடைபயணம்.

*ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால் கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை …குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் தற்போது அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை விளக்கம்.

*மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையிலான அரசில் 18 கேபினட் அமைச்சர்கள் உட்பட 28 அமைச்சர்கள் பதவி ஏற்பு .. முன்னாள் மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் , பாஜக தேசிய செயலாளர் கைலாஸ் விஜய் வர்கியா உள்ளிட்டோருக்கும் அமைச்சர் பதவி.

*கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா மகன் விஜேயேந்திராவுக்கு மாநில பாஜக தலைவர் பதவி தரப்பட்டதை தொடா்ர்ந்து அவருடைய ஆதரவாளர்களுக்கே முக்கிய பதவி … மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்காமல் நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக கட்சி மேலிடம் மீது முன்னாள் முதலமைச்சர் சதானந்தா கவுடா புகார்,

*முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் கொண்டாட்டம் … டெல்லியில் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை.

*தலைநகர் டெல்லியில் காலை பொழுதில் கடுமையான பனி மூட்டம் .. காலை 6 மணி அளவில் தரை இறங்க வேண்டிய எட்டு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்துக்கு மாற்றம்

*இலங்கையி்ல் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க ராணுவத்தின் உதவியுடன் கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்னை 15 ஆயிரத்தை கடந்தது.. ஏராமான போதைப் பொருட்களும் பறிமுதல்.

*பாகிஸ்தானில் பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து பிராச்சாம் ஆரம்பம் … நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் , இம்ரான் கானின் தெக்ரிக் இ இன்சாப் , பில்வால் புட்டோவின் மக்கள் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி.

*காசா முனையில் உள்ள அல் -மாஹாகசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படைகள் குண்டு வீசித் தாக்கியதில் 70 பேர் கொல்லப்பட்டதாக தகவல் … குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் காயம்.

*சீனா நாட்டுத் தலைநகர் பெய்ஜிங்கில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வெப்ப நிலை மைனஸ் 10 டிகிரி செல்சியசுக்கு சென்றதால் கடுமையான குளிர் ..கல்வி நிலையங்கள் மூடல், போக்குவரத்தும் பாதிப்பு.

*உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது,, தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டங்களில் குடும்பத்துடன் பங்கேற்பு. உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சி பறிமாற்றம்.

* கிறித்து மஸ் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து … கிறிஸ்துமஸ் விழாவின் அடையாளங்களான நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தை போற்றவும் அழைப்பு.

*இயேசு நாதர் பிறந்த பெத்தல்கோம் நகரத்தில் கிறித்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை .. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள பெத்தல்கோம் நகரமானது இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாாக வெறிச்சோடி கிடக்கிறது.

*குஜராத் மாநிலத்தில் துவரகா நகரத்தில் ஒரே இடத்தில் 37 ஆயிரம் பெண்கள் பாரம்பரிய நடனம்…. மஹா ராஸ் திருவிழாவிற்காக கலாச்சார முறைப்படி சிவப்பு நிறத்தில் உடையணிந்து, பெண்கள் பங்கேற்பு.

*சபரி மலை ஐய்யப்பன் கோவிலில் நாளை மறுதினம் காலை மண்டல பூஜை … லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள்.

*சபரிமலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி வந்து தரினம்செய்ததுதான் மண்டல கால பூஜை காலத்தில் அதிகம் பேர் வந்தது ஆகும் ..தரிசனம் செய்வதற்கான காத்திருப்பு நேரம் 15 மணி நேரமாக அதிகரிப்பு.

*நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காலம் ஆரம்பமானதை அடுத்து தாவரவியல் பூங்கா உட்பட பல இடங்களை பனி மூடியது,,, கடுமையாக குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

*இந்திய-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நாளை தொடங்குகிறது … தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டியில் இது வரை வெல்லாததால் இந்த முறை வெல்ல வேண்டும் என்று இந்திய அணி ஆர்வம்.

*வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் .. தீரன் அதிகாரம் – 2 படத்தில் வினோத் தீவிரமாக இருப்பதால் கமலின் படம் ரத்து என்றும் செய்தி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *