தலைப்புச் செய்திகள்… (24-12-2023)

*இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் சிங் உள்ளிட்ட நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்தது விளையாட்டு அமைச்சகம்…. பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான நபர் சஞ்சய் சிங் என மல்யுத்த வீரர்கள் போர்க்கொடி தூக்கியதால் சர்ச்சை ஏற்பட்டது.

*மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெறுவதாக இரு தினங்கள் முன் அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் … மல்யுத்த வீரர் பஜ்ரங்க் புனியாவும் பத்ம ஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில் சஞ்சய் சிங் தலைமையிலான அமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை.

*இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தற்காலிக நிர்வாகக் குழு ஒன்றை ஏற்படுத்துமாறு இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் .. சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் பணியில் தொய்வு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை.

*புதிதாக பரவி வரும் கோவிட் ஜே என் 1 தொற்றை தடுக்க தடுப்பூசி தேவையில்லை .. இந்திய சுகாதார அமைச்சகம் தகவல்

*தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின் வினியோகத்தை சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம். தென்னரசு தகவல் … மின் வினியோகத்தில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம் குறித்து தூத்துக்குடியில் மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்காணி உள்ளிட்டவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியதாகவும் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு.

*நெல்லை மாவட்டத்தில் 2, 3 இடங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது… தூத்துக்குடி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் சரிசெய்யப்பட்டுள்ளதாக மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

*மழை, வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 328 குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. வீடு, கால்நடை சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும் சிவ தாஸ் மீனா விளக்கம்.

*வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.6000-க்கு பதில் ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை, இறந்த கால்நடைகளை அகற்றி நோய் பரவாமல் தடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தார்ல ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை … நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசுக்கு உதவிடும் நடவடிக்கை

*கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் இயக்கப்படும்.. மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்.

* தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சாதனைகளை வலை தளங்களில் பகிர்ந்து பலரும் பெருமிதம் .. சமூக சீர்திருத்தம், சாதி மற்றும் பாலின சமத்துவம், சாதி வேற்றுமை மற்றும் மூடநம்பிக்கைகளை களைவது, போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார் என்று அனவைரும் கருத்து.

*சென்னையில் தந்தை பெரியார் சிலைக்கு நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை .. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் பெரியார் நினைவை போற்றும் நிகழ்ச்சிகளுக்கு பலரும் ஏற்பாடு.

*முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி…தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை 10 வருடங்களும் ஆட்சி செய்த பெருமை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

*நாகூர் ஆண்டவர் தர்கா 467வது ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நேற்றிரவு விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலத்தை தொடர்ந்து இன்று பெரியாண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி … அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல ஆயிரம் பேர் பங்கேற்பு.

*இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது அரபிக் கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான ட்ரோன், ஈரான் நாட்டில் இருந்து ஏவப்பட்டது .. அமெரிக்கா ராணுவம் வெளியிட்டு உள்ள பரபரப்பான தகவலுக்கு ஈரான் தரப்பில் இருந்து பதில் ஏதுவும் வெளியாகவில்லை

*சர்வதேச மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை … மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அளித்த வாய்ப்பால் மிகவும் பெருமிதம் அடைவதாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் பெருமிதம் … நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய மிட்செல், ரூ 14 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்ததால் மகிழ்ச்சி.

*பிரபல கால் பந்தாட்ட வீரர் ரொனால்டோ தமது கால் பந்து பயணத்தில் 870 – வது கோலை அடித்து சாதனை … சவுதி புரோ லீக் தொடரில் அல் எட்டிபா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவின் அல்- நாசர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி..

*சென்னை, நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்து மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும் முன்பே உயரிழந்தார் … ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் போண்டா மணி.

*தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 30- ஆம் தேதி முதல் மழை பெய்யக் கூடும் … வானினை மையம தகவல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *