தலைப்புச் செய்திகள் (24- 02-2024)

*இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஒதுக்கீடு…. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.

*ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் ஐ.யூ.எம்.எல் போட்டியிடும்…. மீண்டும் நவாஸ் கனியே வேட்பாளராக போட்டியிடுவார் என ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் அறிவிப்பு.

*திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து…நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க. போட்டியிடும்.

*நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் பற்றி சி விஜில் செயலி மூலம் புகார் தெரிவித்தால் நூறு நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்… சென்னையில் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி.

*தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம் … நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர் உறுதி.

*காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரிணி மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் … கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசில் கிடைக்காது என்ற அதிருப்தியில் கட்சி மாறியதாக தகவல்.

* டெல்லியை நோக்கி முன்னேறும் போராட்டத்தை பிப்ரவரி 29-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு… போராட்டம் குறித்து அடுத்த வாரம் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்.

*மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை… தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர் மலை அணிவித்துக் கொண்டாட்டம்.

*”கடுமையான நிதி நெருக்கடி உள்ள போதும் ₹100 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்களை வழங்கி வருகிறோம்” என்று சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…. நாள் தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் நெம்மேரி குடி நீர் ஆலை அமைப்பு.

*தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்பது அதிமுகவின் தேர்தல் முழக்கம் … சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

*திமுக எம்.பிக்கள் தமிழ்நாடு மக்களின் பிரச்னைக்களுக்காக குரல் கொடுக்கவில்லை, நீட் தேர்வை திமுக அரசு இன்னும் ரத்து செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி புகார் … காவிரி நீர் பிரச்சினை வந்த போது தமிழ்நாடு மக்களுக்காக அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது என்றும் பேட்டி.

*விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவன்- மனைவி மற்றும் மகளை கட்டிப் போட்டுவிட்டு 60 சவரன் நகைகளை கொள்ளயைடித்துக் கொண்டு ஓட்டம் … கட்டிலுக்கு அடியில் படுத்திருந்ததால் கொள்ளையர் கண்களில் படாமல் தப்பிய 10 வயது சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் வீட்டுக்கு வந்த போலீஸ் விசாரணை.

*மதுரையை அடுத்த திருமங்கலம் வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவில் 150 ஆடுகளை வெட்டி படையல் … சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி பிரியாணி விருந்து.

*டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இடையே கூட்டணி உறுதியானது .. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் 24 ல் காங்கிரசும் இரண்டில் ஆம் ஆத்மி போட்டியிடவும் முடிவு.

*ஆந்திராவில் சட்டசபை தேர்தலில் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கும் நடிகர் பவன் கல்யாண்க்கும் இடையே ஏற்ப்பட்ட உடன்பாட்டின் படி தெலுங்கு தேசம் 94 தொகுதிகளிலும் ஜனசேனா 27 இடங்களிலும் போட்டியிட திட்டம்.. பாஜகவுடன் கூட்டணி இறுதியானதும் மற்ற தொகுதிகளை பகிர்ந்து கொள்ள முடிவு.

*மக்களவை தேர்தல் நடைபெறும் நாள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் போலியானது…தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிடும் என்றும் விளக்கம்.

*உத்திர பிரதேசத்தில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்களை பூர்த்தி செய்ய கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் யாகி ஆதித்ய நாத் உத்தரவு … 60 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின் போது வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரின் பேரில் நடவடிக்கை.

*உலகிலேயே மிகப்பெரிய சேமிப்பு திட்டத்தை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு … சேமிப்பு திட்டத்தின்கீழ் நாட்டில் ஆயிரக்கணக்கான சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றும் அறிவிப்பு.

*உத்திர பிரதேசத்தில் மொராதாபாத்தில் ராகுல் காந்தியின் நீதி பயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு … பாஜக ஆட்சியில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரித்துவி்ட்டதாக புகார்.

*புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.- அரசாணை வெளியிட்டு மத்திய அரசு அறிவிப்பு… இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் – இந்திய சாட்சிகள் சட்டம் உட்பட்ட அனைத்துச் சட்டங்களுக்கும் இந்தி பெயரிட்டு மாற்றம்.

*உ.பி.யில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து … 22 பேர் உயிரிழந்த பரிதாபம்.

*வாடகைத் தாய் முறையில் பிறக்கப் போகும் குழந்தை அதன் தந்தையின் உயிரணுவையோ தாயின் கரு முட்டையை பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசின் விதிமுறையில் மாற்றம் .. தாய், தந்தை இருவரில் யாராவது ஒருவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று குறைபாடு இருந்தால் மட்டுமே வாடகைத் தாய் முறையை அணுக முடியும் என்றும் விளக்கம்.

*பாகிஸ்தானில் பலுசி்ஸ்தான் பகுதியில் ஈரான் நடத்திய வான் வழித்தாக்குதலில் ஜெய்ஷ் அல் – அடல் என்ற போராளிக் குழுவின் தளபதி இஸ்மாயில் ஷாபாஷ் உட்பட பலர் கொல்லப்பட்டதாக தகவல் … கடந்த 2010 – ஆம் ஆண்டு உருவான ஜெஷ் அல்- அடல் இயக்கம் அவ்வப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

*இந்தியாவுக்கு எதிரான ராஞ்சி நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் குவித்தது.. ஜோ ரூட் 106 எடுத்து அபார ஆட்டம்.

*இந்திய அணிக்கு ஆட்ட நேர முடிவில் 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் … அதிகபட்சமாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 73 ரன்களை குவித்து ஆட்டமிழப்பு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *